veg.cheese omlet
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வெஜிடபிள் சீஸ் ஆம்லெட்

Share

தேவையான பொருட்கள்

முட்டை – 3
குடைமிளகாய் – 1
முட்டைகோஸ் – 100 கிராம்,
(விருப்பப்பட்டால்) கரட்- 1
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சீஸ் – ஒரு சிறு கட்டி
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். சீஸை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, கேரட், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.

அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.

விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம். சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...