love today
சினிமாபொழுதுபோக்கு

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘லவ் டுடே’

Share

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக அவரே இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் மேலும் ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்ததாகவும் தகவல் வெளியானது. இப்படத்தை தெலுங்கில் டப் செய்து படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் ‘லவ் டுடே’ படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது. இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி உள்ளன. சூர்யா நடித்த சூரரை போற்று படமும் இந்தியில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

#cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...