சமையல் குறிப்புகள்
முட்டை வெஜிடபிள் பணியாரம்
தேவையான பொருட்கள்
முட்டை – 5
வெங்காயம் – 2
தக்காளி – 2
கரட் – 1
முட்டைகோஸ் – 1
பச்சை மிளகாய் – 4
தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு- சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும், இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான முட்டை வெஜிடபிள் பணியாரம் தயார்!
#LifeStyle
You must be logged in to post a comment Login