இலங்கையில் சூர்யா – 42 படக்குழு!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் விரைவில் இலங்கை செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் உள்ள அடர்ந்த காடுகளில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு சுமார் 60 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப் படுகிறது.

500x300 1797077 3

1000 வருடங்களுக்கு முந்தைய சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 4 கேரக்டர்களில் நடிக்கவுள்ளார்.

தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு 160 முதல் 180 நாட்கள் வரை நடைபெற இருப்பதாகவும் முதல் பாக படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸ் ஆன பின்னரே இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

#cinema

Exit mobile version