சினிமா
பட்டையை கிளப்பும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’
The sensational #Ranjithame hits 50M views 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) November 16, 2022
📽️ https://t.co/Q56reRe9tc
🎵 https://t.co/gYr0tkVJkD#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @TSeries #RanjithameSong #Varisu #VarisuPongal pic.twitter.com/l8ElaoR20h
தளபதி விஜய் குரலில் அண்மையில் வெளியாகிய ‘ரஞ்சிதமே’ பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#cinema
You must be logged in to post a comment Login