ezgif 4 0f04e19717
சினிமாபொழுதுபோக்கு

த்ரிஷா, சமந்தாவைத் தொடர்ந்து சிகிச்சையில் பூஜா ஹெக்டே!

Share

த்ரிஷா, சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய நடிகைகள் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகை பூஜா ஹெக்டே, ஹிந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாளி தண்ணீரில் கால் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து’ தினமும் இப்படித்தான் காலை விடிகிறது’ என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் படிப்படியாக குணமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ezgif 4 3ebe8df702

அதேபோல் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரும் படிப்படியாக குணமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருப்பதால் அவர் புரமோஷனுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

ezgif 4 2289e1a74d

அதேபோல் நடிகை த்ரிஷா வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரும் சிகிச்சையில் உள்ளார். திரையுலகின் முன்னணி நடிகைகள் சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தாமதமாகி வருவது மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

trisha5112022m

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...

36 1
சினிமா

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை நான் ஆனால்.. பாடகி கெனிஷா சொன்ன ரகசியம்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய...

35 3
சினிமா

ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான்,...

34 3
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால்...