சினிமா
தற்காப்புக்கலை பயிற்சியில் காஜல் அகர்வால்! வீடியோ வைரல்
இந்தியன் 2 படத்திற்காக நடிகை காஜல்அகர்வால் களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலை பயிற்சி செய்து வருகிறார்.
அந்தவகையில் களரிப்பட்டு பயிற்சி எடுத்து வரும் காஜல் அகர்வால் இந்த கலை குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்
களரிப்பட்டு என்பது ஒரு பண்டைய இந்திய தற்காப்புக் கலையாகும். இது ‘போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கலைகளில் ஒன்று. இந்த கலையில் இருந்து தான் ஷாலின், குங் ஃபூ மற்றும் கராத்தே போன்ற பிற கலைகள் உருவானது. இந்த களரி பொதுவாக கொரில்லாப் போருக்கு பயன்படுத்தப்பட்டது. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும் ஒரு அழகான நடைமுறையாகும்.
3 ஆண்டுகளாக இடைவிடாமல் முழு மனதுடன் இந்த கலையை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசிரியருக்கு நன்றி. அவர் என்னை பொறுமையாக வழி நடத்தியதற்கும், இந்த கலையை சிறப்பாக கற்று கொடுத்ததற்கும் நன்றி’ என பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.