அழகுக் குறிப்புகள்
முகப்பொலிவுக்கு முட்டையின் வெள்ளைக்கரு! இப்படி பயன்படுத்துங்க


முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றிசரும பொலிவை தக்க வைத்துக்கொள்ள துணை புரியும்.
தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
- முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும்.
- முட்டையின் வெள்ளைக்கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக ‘பிரஷ்’ மூலம் தடவ வேண்டும். முட்டைக்கரு நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தேவையற்ற ரோமங்கள் முளைக்காது.
- முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் அந்த பாதிப்பு நீங்கி விடும்.