சமையல் குறிப்புகள்
வீட்டிலேயே KFC ஸ்டைலில் சுவையான மொறு மொறு சிக்கன்! செய்வது எப்படி?
KFC சிக்கனுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அடிமையாக இருக்கிறார்கள். இதனுடைய சுவையும் அருமையாகவே இருக்கும்.
ஆனால் இனிமேல் உங்களுக்கு ப்ரைட் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கேஎஃப்சி-க்கோ அல்லது வேறு ஏதேனும் வெளி உணவகங்களிலோ ஆர்டர் செய்யத் தேவையில்லை.
உணவகங்களில் கிடைப்பது போலவே அதே சுவையுடனும் அதை விட அதிக தரத்துடனும் வீட்டிலேயே KFC சிக்கன் செய்ய முடியும். தற்போது அவை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- 270 கிராம் சிக்கன்
- ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு சுவையுள்ள உப்பு
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- கருப்பு மிளகு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
- 1 ½ கப் சுத்திகரிக்கப்படாத மைதா மாவு
- இரண்டு முட்டைகள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
முதலில் அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சுத்திகரிக்கபடாத மைதா மாவு சேர்த்து அதனுடன் பூண்டு சுவையுள்ள உப்பு, மிளகாய்த்தூள், கருப்பு மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.
பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். அதனுடன் ஏற்கனவே கழுவி வைத்த சிக்கன் துண்டுகள, அடித்து வாய்த்த முட்டையில் கலந்து, அதனை இன்னொரு பாத்திரத்தில் உள்ள மாவு கலவையில் நன்றாக திரட்டி எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு சிக்கன் துண்டுகளையும் தனித்தனியாக பிரட்டி எடுத்து அவற்றை தனி பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு விட்டு நன்றாக சூடுபடுத்த வேண்டும்.
எண்ணெய் சூடாகி அதிலிருந்து குமிழ்கள் வரும் போது ஏற்கனவே தயாராக வைத்திருந்த சிக்கன் துண்டுகளை மெதுவாக எண்ணெயில் போட வேண்டும்.
அதிகமான அவசரம் இல்லாமல் மிக மெதுவாக மென்மையாக சிக்கனை எண்ணெயில் இட்டு பொரிக்க வேண்டும். சிக்கனை எண்ணெயில் போட்ட பிறகு அதனை கிளறவோ, நகர்த்தவோ கூடாது.
அவ்வாறு செய்தால் சிக்கனில் உள்ள மாவு தனித்தனியாக திரிந்து வராமல் சிக்கன் துண்டுகளோடு ஒட்டிக்கொண்டு நல்லதொரு சுவையைக் கொடுக்கும். இரண்டு நிமிடங்களுக்கு அவற்றை எண்ணெயில் பொறிக்க வேண்டும்.
சிக்கன் துண்டுகள் பொன்னிறத்திற்கு மாறியவுடன் வாணலியில் இருந்து எடுத்து விடலாம்.
எண்ணெய் அதிகமாக இருப்பதை விரும்பாதவர்கள், சிக்கனை ஒரு டிஷ்யூ பேப்பரிலோ அல்லது சாதாரண எண்ணெய் வடிக்கும் பாத்திரத்திலேயே சிறிது நேரம் வைக்கலாம். இது உணவகங்களில் கிடைக்கும்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed - tamilnaadi.com