சினிமா
இந்திராகாந்தியாக மாறிய கங்கனா ரனாவத்! எந்த படத்தில் தெரியுமா?
![இந்திராகாந்தியாக மாறிய கங்கனா ரனாவத்! எந்த படத்தில் தெரியுமா? 3 62cfced209921](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2022/07/62cfced209921.jpeg?lossy=2&strip=1&webp=1)
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தான் இயக்கி நடிக்கும் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார்.
அச்சு அசலாக இதில் இவர் இந்திரா காந்தியை போலவே உள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எமர்ஜென்சி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
அதில் கங்கனா, “எமர்ஜென்சி பர்ஸ்ட்லுக் போஸ்டரை வழங்குகிறேன்! உலக வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய பெண்களில் ஒருவரை சித்தரிக்கிறது.. எமர்ஜென்சி படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#kanganaRanaut #cinema #IndiraGandhi
You must be logged in to post a comment Login