16 guava leaf 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைக்கு கொய்யா இலை

Share

கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து அதன் பரவலை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர பருக்கள் மறையலாம்.

large rt5eyj 42220

 

கொய்யா இலையில் அதிக அளவில் வைட்டமின் சி சத்து இருப்பதால் முகப்பரு உருவாவதை தடுக்கிறது. கொய்யா இலையில் இருக்கும் தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை மாற்றுகிறது.

கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும். கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும்.

guava leaf powder 1 300x225 1

15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும். கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.

கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி பலம் பெறும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும். மேலும் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

4 1548763762 1

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...