சமையல் குறிப்புகள்
சுவையான ரவா மசாலா தோசை

எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஒரு சூப்பரான ரவா மசாலா தோசை செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்
ரவை – 150 கிராம்
தயிர் – அரை கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1
தேக்கரண்டி சோம்பு – தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை சிறு துண்டாக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும். அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும்.
இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
அதன்பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கினுள் உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும்.
இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.
இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.
#LifeStyle
You must be logged in to post a comment Login