பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
திரையுலகின் முன்னணி நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஷாலினி அஜித் நடித்து வருகிறார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளமை அஜித் ரசிகர்கர்களிடத்தே மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், நிழல்கள் ரவி, லால், விஜயகுமார், நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது ஷாலினி அஜித் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எனவும், அந்த கதாபாத்திரம் ரகசியமாக பேணப்பட்டு வருகின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என அஜித்தின் மேனேஜர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஷாலினி அஜீத் நடித்துள்ளார் என்பது வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
#Cinema
Leave a comment