‘ஆரம்பிக்கலாமா?’ – வெளியாகியது பிக்பொஸ் புரொமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பொஸ் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் தான் இப்போது அனைவரதும் எதிர்பார்ப்பு.
இந்த நிலையில், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ள பிக்பொஸ் சீஸன் 5 இன் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புரொமோவில் அட்டகாசமான கெட்டப்பில் கமலஹாசன் ’ஆரம்பிக்கலாமா’ என்று கூறுவதும் ஐந்தாவது சீஸனின் பிக்பொஸ் லோகோவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள பிக்பொஸ் சீஸன் 5 இன் இந்த புரொமோ தற்போது வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து பிக்பொஸ் நிகழ்ச்சி இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் இன்னும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இன்னும் சில நாள்களில் போட்டியாளர்கள் தொடர்பான விபரங்களும் வெளியாகலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
Leave a comment