Facial With Egg Shells
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

முட்டை ஓட்டை கொண்டு கூட முகத்தை பளிச்சிட செய்யலாம்! எளிய அழகு குறிப்புகள் இதோ !!

Share
இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
Facial With Egg Shells
  • முதலில் எடுத்து வைத்த முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து, இந்த முட்டை ஓட்டு பொடியை பயன்படுத்தி எளிதினில் முக அழகை பராமரிக்கலாம்
  • முட்டை ஓட்டு பொடியை முட்டையின் வெள்ளை கருவோடு ஒன்றாக அடித்து கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை நீங்கள் முகத்தில் தடவ வேண்டும். உலர்ந்த பின்னர் கழுவி விடுங்கள். உடனடியாகவே உங்கள் முகம் பிரகாசம் ஆகியிருப்பதை நீங்கள் உணர முடியும். வாரம் இருமுறை நீங்கள் செய்தால் நன்மை தரும்.
  • முட்டை ஓட்டு பொடியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து பசைபோல செய்து அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் வெயிலால் கறுத்து களையிழந்து முகம் ஜொலிக்கும்.
  • 2 டீஸ்பூன் முட்டை ஓட்டு பொடியுடன் தேன், கடலை மாவு போட்டு கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவி விடுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.
  • 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கும் முன் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி வறட்சி அடையாமல் நீண்ட நேரம் புத்துணர்வோடு இருக்கும்.
#BeautyTips #Skincare

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...