தமிழில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தினை எட்டிவிட்டதால் ஃபைனிலிஸ்ட் ஆகியுள்ள போட்டியாளர்களில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்ற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. போட்டியில் தற்போது மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா மற்றும் டிக்கெட் டூ ஃபினாலே வென்ற விஷ்ணு விஜய் என தற்போது வீட்டிற்குள் மொத்தம் 5 போட்டியாளர்கள் உள்ளனர்.
டிக்கெட் டூ ஃபினாலே போட்டி வீட்டிற்குள் நடத்தபட்டதில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் ஃபையர் பற்றிக்கொண்டது என்றே கூறவேண்டும். இதில் மாயா, பூர்ணிமா, விசித்ரா மற்றும் நிக்சன் ஆகியோர் ஒரு குழுவாகவும் தினேஷ் மணி, ரவீனா மற்றும் விஷ்ணு ஆகியோர் ஒரு குழுவாகவும் விளையாடினார்கள். இதில் நிக்சனும் ரவீனாவும் எவிக்ட் ஆக, குழுவில் இருந்த போட்டியாளர்கள் மத்தியிலான போட்டி இன்னும் அதிகமானது.
இவர்கள் மட்டும் இல்லாமல் டிக்கெட் டூ ஃபினாலேவில் பங்கேற்க முடியாத அர்ச்சனா மற்றும் விஜய் இருவரும் மாயா ஸ்குவாடில் இணைந்து விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். மாயாவும் பூர்ணிமாவும் டாஸ்க்கின்போது மட்டும் கேம் ப்ளானுடன் இருந்தனர். மற்ற நேரங்களில் முடிந்தவரை யாரிடமும் சண்டை செய்யக்கூடாது என்ற மனநிலையிலேயே இருந்தனர்.
ஆனால் விஷ்ணு மற்றும் மணிசந்திராவுக்கு ஆகியோருக்கு ஏற்கனவே பூர்ணிமா மற்றும் மாயாவிடம் இருந்த பழைய பிரச்னைகளை மனதில் வைத்து அவர்களிடம் தொடர்ந்து இடைவெளியை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக போட்டியாளர்கள் கிட்டத்தட்ட ஆண்கள்குழு பெண்கள்குழு என பிரிந்துவிட்டனர். இதில் ஆண்கள் குழுவினர் அதாவது விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் ஆகியோர் ஸ்மால் பாஸ் வீடே கதி என்ற நிலையிலேயே இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் தொடர்ந்து மாயா மற்றும் பூர்ணிமா குறித்தும் தங்களிடம் உள்ள வன்மத்தை கொட்டுவதாகவே இருந்தனர். ஆனால் பூர்ணிமாவும் மாயாவுமோ பணப்பெட்டியில் பணம் அதிகமானால் எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் என்று பேசிக்கொண்டு இருந்தனர். குறிப்பாக டாஸ்க் வரும்போதும் பிக்பாஸ் முடியும் தருவாயில்கூட இவர்கள் ஏன் இன்னும் இவ்வளவு வன்மத்துடன் இருக்கின்றனர் என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக்கொண்டது ரசிகர்களின் மனதையும் பிரதிபலிப்பதைப் போன்று இருந்தது.
ஆமாம். இதற்கு முன்னர் சீசன்களை எல்லாம் உதாரணமாக எடுத்துக்கொண்டால் போட்டி முடியும் தருவாயில் அதாவது 90வது நாளுக்குப் பின்னர் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மற்றவர்கள் குறித்த நல்ல அபிப்ராயத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியிலும் ‘ஃபீல் குட்’ மனநிலையை உருவாக்குவார்கள். ஆனால் இந்த சீசனில் 100 நாட்கள் ஆகியும் கூட அந்த சூழல் இதுவரை வீட்டினுள் ஏற்படவே இல்லை. இதுவே இந்த சீசன் மீது ரசிகர்களுக்கு உள்ள குற்றச்சாட்டாகவே உள்ளது.
வைல்ட் கார்டு என்ரி மூலம் வீட்டிற்குள் வந்து ஃபைனிலிஸ்டாக முன்னேறியுள்ள அர்ச்சனா ஏற்கனவே தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஸ்கோர் செய்து ரசிகர்களிடம் பெரும் இடத்தினைப் பெற்றுவிட்டார். அதேபோல்தான் தினேஷும். இதனால்தான் இவர்கள் இருவரும் ஃபைனலிஸ்ட் ஆகியுள்ளனர். இதில் தினேஷ் தனக்கு அளிக்கப்பட்ட டாஸ்க்குகளை சிறப்பாகச் செய்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் என்றே கூறவேண்டும். ஆனால் அப்படி மக்கள் மனதை வென்ற தினேஷ் கடந்த சில வாரங்களாக விஷ்ணு மற்றும் மணியுடன் இணைந்து மாயா, பூர்ணிமா, விசித்ரா குறித்து ஏதாவது பேசிக்கொண்டு இருப்பதால் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. சிறப்பாக விளையாடிய தினேஷ் ஏன் இப்படிச் செய்கின்றார் என்ற கேள்வியை எழுப்புகின்றது.
அர்ச்சனாவைப் பொறுத்தவரையில் பிக்பாஸ் டீமே சந்தேகப்படும் அளவிற்கு உள்ளார். அர்ச்சனா தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் தனது பி.ஆர் டீமை சிறப்பாக தயார் செய்துள்ளதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துத்தான் யார் தனக்காக பி.ஆர். டீமை தயார் செய்துவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர் என்ற கேள்வியைக் கேட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. கடந்த வாரம் வரை அர்ச்சனாதான் வெற்றியாளர் என்ற மனநிலை போட்டியாளர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. அர்ச்சனாவின் கேம் ப்ளான் என்னவென சக போட்டியாளரான விஜய் வர்மா சொல்லும்வரை போட்டியாளர்களுக்கே முழுமையாகத் தெரியவில்லை. சிறப்பாக பாடுகின்றார் அர்ச்சனா. அவருக்கான பி.ஆர் டீம் அவரைவிட சிறப்பாக வேலை செய்கின்றது. ஆனால் மக்கள் மனம் வெல்ல இது மட்டும் போதாது. அர்ச்சானா வீட்டிற்குள் சென்றபோது அவருக்கு நடந்த புறக்கணிப்புகளை எப்போதும் நியாயப்படுத்த முடியாது.
மணிச்சந்திரவைப் பொறுத்தவரையில் இந்த சீசனில் அவர் ஒரு எக்ஸ்ப்ரிமெண்ட் என்றுதான் கூறவேண்டும். மிகவும் முக்கிய வீட்டிற்குள் பிரச்னைகள் பல நடக்கும்போது அமைதியாகவே இருந்துள்ளார். இதனை அவரே ஒத்துக்கொண்டும் உள்ளார். ஆனால் இதற்கு முன்னர் நடைபெற்ற சீசனில் நடக்கும் தவறுக்கு நியாயம் கேட்காமல் இருந்த போட்டியாளர்கள் அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் வீட்டிற்குள் இருப்பதே பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் மணி எப்படித்தான் ஃபைனலிஸ்ட் ஆனார் என்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். மூன்றாவது சீசனில் டேன்ஸ் மாஸ்டர் சாண்டி இருந்தபோது, தனது நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து ’வீ ஆர் தி பாய்ஸ்’ என்ற முழக்கத்தை சொல்லி வந்தார். அவரது வீட்டில் இருந்து சாண்டியின் நண்பர்கள் வட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட வாசகம் பொறித்த டீ சர்ட்டை உள்ளே அனுப்பினார். மணியும் நடனத்துறையைச் சார்ந்தவர் என்பதால் சாண்டி மாஸ்டர் தனது அணியின் டீ சர்ட்டை மணிக்கு கொடுத்தாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், மணி பல்வேறு நேரங்களில் அந்த டீ சர்ட்டை அணிந்து வீட்டிற்குள் இருந்தார். இதனால் அவருக்கு வாக்குகள் கிடைத்ததா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் மூன்றாவது சீசனின் பாய்ஸ் டீமின் ஆதரவு மணிக்கு இருந்திருக்குமே என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் மணி இந்த சீசனில் தனக்கான ஒரு நலம்விரும்பிகள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
மாயா தொடக்கம் முதல் கேம் ப்ளானுடன் இருந்தார். அதேநேரத்தில் நட்பு பாராட்டவேண்டிய இடத்தில் நட்பு பாராட்டாமல் இல்லை. கேள்வி எழுப்பவேண்டிய இடத்தில் கேள்வி எழுப்பாமல் இல்லை. ஒரு எண்டர்டெய்னராக மட்டும் இல்லாமல் சரியான கேம் ப்ளானுடனும் அதேநேரத்தில் மனிதத்துடனும் இருந்துள்ளார். அவர் பல இடங்களில் தன்னிடம் சண்டையிட்டுக் கொண்ட போட்டியாளர்களுக்கு ஆதரவாக கேள்விகள் எழுப்பியும் உள்ளார். இந்த சீசன் முழுவதுமே அவர் அப்படித்தான் இருந்துள்ளார். நேற்றைக்கு அதாவது ஜனவரி 11ஆம் தேதி வீட்டிற்குள் சென்ற எவிக்ட் ஆன போட்டியாளர் ஜோவிகா, “ மாயா நீ மட்டும் இல்லைனா பிக் பாஸ் சீசன் செவன் வேஸ்ட்” எனக் கூறியுள்ளார். இது பிக்பாஸ் ரசிகர்கள் பலரது கருத்தாக்கூட இருக்கலாம். இந்த சீசன் முழுவதும் சிறந்த எண்டர்டெய்னராக இருந்தவர்களை பட்டியலிட்டால் அதில் மாயா என்ற பெயர் இல்லாமல் இருக்காது. மாயா மீது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அவரது கேப்டன்சி மட்டும்தான். மேலும் பல இடங்களில் அவர் அமைதியாக இருந்ததும் அவரது ரசிகர்களுக்கே முகம் சுழிக்க வைத்தது. தற்போது வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமா, ஜோவிகா, அக்ஷயா, சரவண விக்ரம், அனன்யா ஆகியோர் மாயாவுக்கு தங்களது ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது தங்களது ரசிகர்களை மாயாவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யும் யுக்தியாக பார்க்கப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் நிக்சன், ஐஸ்வர்யா மற்றும் விசித்ரா ஆகியோரது ரசிகர்களுமே தங்களது ஆதரவை மாயாவுக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாயா கிருஷ்ணன் இந்த சீசனின் டைட்டிலை வெல்பவராக பார்க்கப்படுகின்றது.
தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சிறப்பாக நடித்து அசத்தியும் இருந்தார். ரசிகர்கள் மனதினை வெல்ல ஒரு எண்டர்டெய்னராக இருந்தால் மட்டும் போதுமா என்றால் அதுதான் இல்லை. தரமான எண்டர்டெய்னர்தான் வெற்றியாளர் என்றால் மூன்றாவது சீசனில் சாண்டி டைட்டிலை வென்றிருப்பார், நான்காவது சீசனில் ஆரி டைட்டில் வின்னராகி இருக்க முடியாது. எண்டர்டெய்னர் என்பதையும் கடந்து ரசிகர்களின் மனக்கணக்கில் உள்ளதை இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் ஒவ்வொரு பண்பு கொண்டவரை தேர்வு செய்கின்றனர். ஆனால் பெரும்பாலும் நியாமாக விளையாடிய போட்டியாளர்களே வென்றுள்ளனர். பார்க்கலாம் இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்று..!
- bb 7 tamil
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil day 102
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 today episode
- bigg boss unseen tamil season 7
- kamal haasan
- Tamil
- tamil shows
- tamil tv