நீச்சல் குள விடுதியில் ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர்.
தொடர்ச்சியாக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா, சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது மாலைதீவு சென்றுள்ள ஆண்ட்ரியா ஆடம்பரமான நீச்சல்குள விடுதி ஒன்றில் எடுக்கப்பட்ட தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிறகென்ன சொல்ல வேணுமா இவரின் ரசிகர்கள் அவற்றை வைரலாக்கி வருகின்றனர்.
Leave a comment