தீபாவளி ரேஸில் இணைகிறது ‘பீட்ஸ்’ – மாஸ் அப்டேட்
தீபாவளி ரேஸில் இணையத் தயாராகி வருகிறது தளபதியின் பீட்ஸ்.
ஏற்கனவே சூப்பர் ஸ்ராரின் அண்ணாத்த மற்றும் தல அஜித்தின் வலிமை ஆகிய படங்கள் தீபாவளி ரேஸில் மோதவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பீட்ஸ் திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது பீட்ஸ். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல தயாராகி வருகின்றனர்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே தயாராகிவிட்ட நிலையில், படத்தின் ‘சிங்கிள் ரக்’ பாடலை
எதிர்வரும் தீபாவளியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக விஜய், அஜித், ரஜனி ரசிகர்கள் என மூன்று தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து தான்.
Leave a comment