FB IMG 1629395239778
பொழுதுபோக்குசினிமா

கைகோர்க்கும் அஸ்வின் – ஷிவாங்கி ஜோடி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Share

கைகோர்க்கும் அஸ்வின் – ஷிவாங்கி ஜோடி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி. இந்த ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

விளம்பரங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்த அஸ்வின் தற்போது வெள்ளித்திரையில் பிஸியாக உள்ளார். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்த ஷிவாங்கியும் படங்கள், பாடல்கள் என பிஸியாகவுள்ளார்.

இந்த நிலையில் அஸ்வின் – ஷிவாங்கி எப்போது திரையில் இணைவார்கள்? என பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது இந்த புதிய தகவல்.

ஆல்பம் பாடல்களில் தனித்தனியாக ஹிட் கொடுத்து வந்த இந்த ஜோடி இப்போது ஒரு ஆல்பம் பாடலில் இணையவுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆல்பம் பாடல் ஒன்று வெளிவரவுள்ளது.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் ஷிவாங்கி மற்றும் சூப்பர் சிங்கர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து இப் பாடலை பாடியுள்ளனர்.எதிர்வரும் 20ம் திகதி வெளிவரவுள்ள இப் பாடலில் அஸ்வின் நடித்துள்ளார்.

அஸ்வின் – ஷிவாங்கி இணையவுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்த ஜோடி கைகோர்த்துள்ள இந்த பாடலும் மிகப்பெரும் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை.

ashh

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...