தளபதியின் மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை எட்டியுள்ளது.
கடந்த வருடம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூலில் மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல், படம் வெளியாவதற்கு முன்பே உலகளவில் பெரும் ஹிட் அடித்தது.
பாடல் வெளியானதிலிருந்து இப்போதுவரை இந்த பாடலுக்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளமை அனைவரும் அறிந்ததே. தமிழில் மட்டுமல்ல உலகம் முழுக்க ரசிகர்களும் பிரபலங்களும் இப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களும் டெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடல் வெளியான 7 மாதத்திலேயே யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அத்தோடு, இரண்டரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.
இந்த சாதனையை தற்போது, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
Leave a comment