யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதை வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய...
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேரூந்துடன்,...
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணற்சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம்...
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது. வாழ்வகம் மற்றும்...
கோப்பாய் பொலிஸ் பிரிவில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவரும் போதைப்பொருள்...
வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்த நிலையில் அதில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ...
நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸ்ஸலாவை ஆகிய பிரதேசங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பிரதேச மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும்...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதி வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறு படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்...
அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம்...
யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய நீதவான்...
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிஸ்...
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந் (மிராஜ்) என அழைக்கப்படும் 35 வயதுடைய...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பணியாளர்களிடையே புரிந்துணர்வையும், நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்க்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு யாழ். பல்கலைக் கழக...
நீர்கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட பாடசாலை ஆசிரியரின் ஒழுக்கம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை அவசியமில்லை என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்....
இலங்கை சாரணர் சங்கத்தின் 110வது ஆண்டு நினைவு கூறும் வகையில் யாழ் மாவட்ட சாரணர் கிளைச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட திரிசாரணர் குழாம், வீட்டுத்தோட்டம் செய்வதனை ஊக்குவித்தது. இதன்படி இன்று(13) வியாழக்கிழமை அரியாலை ஸ்ரீ கலைமகள்...
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது, வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள்...
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் – வராகி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே...