பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஒய்வு முடிவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு பயணிகள் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒய்வு பெறவுள்ளார் என்றும், இதனை தொடர்ந்து...
LIOC நிறுவனத்தால் இலங்கைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளின் குத்தகைக்காலம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். லங்கா இந்தியன் எண்ணெய் கம்பனியால் (LIOC) திருகோணமலை எண்ணெய் தாங்கியில் தற்போது வழங்கப்பட்டுள்ள...
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த தினங்களைவிட நேற்று ஒரு நாளில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 16,764 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் திரிபு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 என...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி நடவடிக்கைக்கு தேவையான டொலரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்...
ஹப்புத்தளை, ஹல்துமுல்ல பகுதியில் இன்று அதிகாலை ‘கெப்’ ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். பெல்மடுலையிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ‘கெப்’ரக வானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்த ஐவரில் நால்வர் ஹல்துமுல்ல...
தேசிய ரீதியாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கலால் திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தி வருவதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளாா். அவ்வாறு பாதுகாப்பு ஸ்டிக்கா் கொண்ட மதுபானம் சந்தைக்கு வருவதற்கு முன்னா் சந்தையில்...
பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் அனைத்துக்கும் மேற்கு வங்க மாநில அரசு தடைவிதித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தடை ஜனவரி 3 ஆம் திகதி முதல்...
அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நேற்றையதினம் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியின்...
இலங்கையில் ஒமிக்ரொன் திரிபுடன் மேலும் 41 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா். உலகின் பல நாடுகளுக்குள்...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார் ஒருமாதம்வரை...
தற்போதைய அரசின் அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது எனவும் அனுபவம்மிக்கவர்கள் அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு புதிய வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே...
இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு புத்தளம் மன்னார் வீதியில் 4 ஆம் கட்டை பகுதி வீடொன்றில் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் 487...
விருந்துக்கு சென்ற இளைஞர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ் இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 32 வயது மதிக்கத்தக்க கிளரின் கொல்வின் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று விருந்துக்கு சென்றிருந்த...
வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்ய விரும்பும் இலங்கை பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். இது சார்ந்த சுற்றறிக்கை சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
சதொச விற்பனை நிலையங்களில் 130 ரூபாய் வீதம் 10 கிலோகிராம் சம்பா அரிசியை பெற்றுக் கொள்ள இயலும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இச்சலுகை நாளை முதல் எதிர்வரும்...
3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் என்பவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய...
ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தல்...
நிறுத்தி வைக்கப்பட்ட காரில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று காலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய...
நேற்று ஏற்பட்ட எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் வீடும் வீட்டுடனான வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது. குறித்த சம்பவம் புத்தளம் குறிஞ்சிப்பிட்டி குரக்கன்சேனையில் பதிவாகியுள்ளது. காலையில் தேநீர் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்த...
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாடுகள் புல் மேய்ந்ததால் கால்நடைகளின் உரிமையாளர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் அளுத்கம 17 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கால்நடை உரிமையாளர்களை பிணையில் விடுவித்துள்ள புத்தளம் நீதவான்,...