2025-ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணிகளில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆர்ட்டிமிஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நிலவிற்கு...
சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி சவால் விடுத்துள்ளார்....
பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே, வெட்டுபுள்ளிகளுக்கேற்ப பல்கலைகழகங்களில் மாணவர்கள் பதிவு...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10) மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாளை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...
உரம் விநியோகம் இராணுவத்தினரால் என்றால் நாட்டில் விவசாய அமைச்சரோ, உர அமைச்சரோ எதற்காக என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (9) புந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர்...
மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து...
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் காணப்படும் அடையாள சின்னங்கள் தமிழ் பௌத்தர்கள் உடையது என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதனை தொடர்ந்து வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை...
இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவர் மிசிகொஷி ஹெதெகி இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர்...
கொழும்பில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளைய தினம் (10) மூன்றாவது பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாநகர...
அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களின் விதிமுறை மீறல்களால் அவர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இலங்கை மத்திய வங்கி...
தசாப்த காலமாக பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
60 வயதிற்கு மேற்பட்ட 3776 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை தெரிவித்தார்....
2021 ஆம் ஆண்டின் இறுதியில், கூகுள் 2021 இல் பிரபலமான பல விடயங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளையும் வெளியிட்டது. அதில் முதலிடம்...
யுனிசெப்பின் 75 ஆண்டு கால வரலாற்றில் கொரோனா பெருந்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா குறிப்பிடுகையில், குழந்தைகளின் கல்வி மேம்பாடு, வறுமை ஒழிப்பு,...
வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (09) வழங்கி...
ஆயுள்வேத மசாஜ் நிலையங்களை ஒழுங்குமுறையில் செயற்படுத்த விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என ஆயுர்வேத ஆணையகத்தின் வைத்தியர் எம்.டி.ஜே அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (09) காலை சர்வதேச சுதேச மருத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஊடக...
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று...
ஏச்ஏஎல் உட்பட 3 இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் 2020-ம் ஆண்டில் ஆயுதங்களை விற்பனை செய்த 100 முன்னணிநிறுவனங்களை...
இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 84 கடற்படை அதிகாரிகளும், 1,684 ஏனைய பதவி...