நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதனூடாக அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்வோர் வன்முறையில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் என...
யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பொலிஸ் பிரிவுகளுக்கு இ டமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம்...
அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் இன்று சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியாருக்கு சிறு குழுவினரால் அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பிரமரும் அவரது பாரியாரும் மிரிசவெட்டியவுக்குச்...
பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நிராகரித்துள்ளார். தென்னிலங்கை ஊடகங்கள் இந்தச் செய்தியை இன்று வெளியிட்டுள்ளன....
நாளை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும்...
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராகப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றிரவு காளிக்குப் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு தப்பு அடித்து, கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. #SriLankaNews
“அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “அவசரகால நிலையால்...
“அரசு, அவசரகால நிலையை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளதால், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் மோசமான தாக்கம் ஏற்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
அவசரகாலச் சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக இராஜிநாமா செய்யுமாறும்...
அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இன்று மாலை, சபாநாயகரை...
இலங்கையின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அவசரகாலச் சட்டம் நிச்சயமாக உதவாது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கைப் பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கின்றார்கள் என்பதை ஒரு மாத...
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழதுள்ளார் என்று களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில்...
பொகவந்தலாவை – மோரா மேல்பிரிவு பகுதியில், குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை குறித்த தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து அவர்களைத்...
“இலங்கை மக்கள், அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்துவது அவசர நிலைமையல்ல.” – இவ்வாறு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்குக் காரணமான விடயங்களைத் தீர்க்க முயல...
“நான் நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி. எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளேன். இந்நிலையில், நடைமுறையிலுள்ள இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
அக்கரைப்பற்று, இறக்காமம் – வாங்காமம் பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில்...
கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வாநகர் கிராமத்திலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் நீதிமன்ற...
“நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் அதிலிருந்து மீள்வதற்கான உதவிகளை சர்வதேச நாடுகளிடம் இலங்கை கோரிக்கொண்டிருக்கும் தருணத்திலும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதானது நாட்டில் ஒரு சரியான சட்டம், ஒழுங்கு இல்லை என்பதை அரசு வெளிப்படுத்துகின்றது.”...
இலங்கையில் மற்றொரு முறை அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களைச் செவிமடுக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று...
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் குறித்து கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். “கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை அனுபவிக்கும்...