யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாகவே இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில்...
மாலைதீவில் உயிரிழந்த இலங்கை காற்பந்தாட்ட தேசிய அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடலம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த பூதவுடல் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்று...
நாட்டில் எரிபொருள், மின்சார பற்றாக்குறையை அடுத்து நீருக்கும் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது. இதன் எதிரொலியாக வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். நாவுல – எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அசாதாரண நிலை...
நாட்டில் இரவுவேளைகளிலும் மின்வெட்டு அமுலாவதால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களில் அதிகமானவை, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றவை என தெரியவந்துள்ளதாக பொலிஸார்...
மார்ச் 05 ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின்...
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பணிப்புரை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்...
ஜப்பானின் இரண்டு நாசகார போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துகள்ளார். ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமான கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், ´HIRADO´...
பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த பாண் உட்பட்ட பேக்கரி பொருட்கள் எரிந்து நாசமாகின. குறித்த சம்பவம் காலி, தல்கம்பொல பிரதேசத்தில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 03 இளைஞர்கள் பயணித்த...
நாட்டு எல்லைக்குள் இன்று டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார். இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 7,000 மெட்ரிக் தொன்...
அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின்...
நாட்டிற்கு டீசல் கப்பல்கள் வந்தாலும் டீசல் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது என கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதேவேளை, 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ள நிலையில்,...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்பதால் கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு தடையின்றி...
புகையிரதங்களுக்கு எதிர்வரும் 3 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் புகையிரதம்...
பெரும்போக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 25 வீதம் இழப்பீடு வழங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை உருவாக்க அமைச்சரவை முன்னதாக...
தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையையிட்டு தந்தை ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3...
மீண்டும் வெல்லவாய எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (01) முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம்...
நாட்டில் நாளைய தினம் ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும்...