tamilnaadi 4 scaled
செய்திகள்ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூன் 29, 2024, குரோதி வருடம் ஆனி 15, சனிக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை வியாபாரம் போன்றவற்றில் முன்னுரிமை கிடைக்கும். இன்று உங்களின் எதிரிகள் பலமாக இருப்பார்கள். இருப்பினும் அதை சிறப்பாக சமாளிக்க முடியும். மாணவர்கள் படைப்பாற்றலில் சிறப்பாக விளங்குவார்கள். குடும்பத்தில் திருமணம், குழந்தை குழந்தை பேறு என மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். உன் குடும்ப தேவைகளை நிறைவேற்ற முடியும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் அதிக செலவிடும் வாய்ப்புள்ளது. இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. என்று பெரியவர்களிடம் பேசும் போது பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. இன்று ஆன்மீகம், சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களின் தொழில் பிரச்னைகளில், வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். உங்கள் கடன் தொகையை அடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு குடும்பத்தில் நிம்மதியாக இருப்பீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சமூகம் மற்றும் அரசியல் தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று சில விஷயங்கள் மன உளைச்சல் ஏற்படுத்தும். அதனால் எந்த விஷயத்தை நிதானமாக அணுகுவதும், சிந்தித்து பேசுவதும் அவசியம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் சக ஊழியர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படவும். உங்களின் தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பிறந்தவர்களுடன் உறவில் இனிமை அதிகரிக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக நீங்கள் செய்யக்கூடிய மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தும் பலனை தரும். உங்கள் வேலை மற்றும் முயற்சிகளில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சில் கண்ணியத்தை கடைப்பிடிக்கவும். மாணவர்களின் கல்வியில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். தாய் வழியில் அனுகூல பலன்களை பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீரும். வீட்டில் தடைப்பட்ட சில வேலைகள், முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். சொத்து வாங்கும் விஷயத்தில் சாதக பலன் கிடைக்கும். உங்களின் நிதி நிலையை மேம்படுத்தும் முயற்சிகள் வெற்றி அடையும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக பிறரின் ஆலோசனையை கேட்டுக் கொள்வது நல்லது. இன்று உங்களின் குடும்ப பொறுப்புகள், உங்கள் வேலையில் உள்ள பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். எல்லா இடங்களில் இருந்தும் பாராட்டுகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்பாடு திருப்தியை தரும். இன்று கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்களின் சொந்தத் தொழில் தொடர்பான விஷயத்தில் மனைவியின் ஆலோசனை நற்பலனை தரும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உடன் பிறந்தவர்களின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் சாதக பலனைத் தரும். உங்கள் பழைய நண்பர் அல்லது உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். இன்று கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.. உங்கள் பிள்ளைகளின் விஷயத்தில் மனக்குழப்பம் இருக்கும். தாயின் உடல் நிலையில் மதிப்பை ஏற்படும். வியாபாரத்திற்கு சிறப்பான நாள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்களின் நிதி நிலைமை மேம்படும். முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். மனதில் உள்ள குழப்பங்கள் தீரக்கூடிய நாள். உங்களின் கடின உழைப்பால் இலக்குகளில் சுலபமாக அடைவீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று இழந்த பணம் திரும்ப கிடைக்கும். வீட்டிலும், பணியிடத்திலும் உங்களின் கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் நிறைவேற்றுவீர்கள். இன்று வண்டி, வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை. இன்று செலவுகளை கவனமாக செய்யவும். சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...