Medam
திடீர் செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எனினும் தேவைக்கு என்பதால் சமாளித்து விடுவீர்கள். மகிழ்ச்சி தரும் சுப செய்தி வரும். உடல் ஆரோக்கியத்தில் நன்மை உண்டாகும். மகிழ்ச்சி உண்டாகும். கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம். தொழிலில் அதிருப்தி ஏற்படும். தெய்வ வழிபாடு சிரமம் தவிர்க்கும். எதிர்பாரா பணவரவு உண்டாகும்.
Edapam
எதிர்பாரா பணவரவும் உண்டு. திடீர் செலவுகளும் ஏற்படும் வாய்ப்புண்டு. அயலவர்களால் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பேசும் போது வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். தந்தைக்கு அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். கணவன்– மனைவியிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். தொழிலில் மறைமுக தொல்லைகளால் சில சங்கடங்களை எதிர்கொள்வீர்கள். சமாளித்து வெற்றியும் காண்பீர்கள். தெய்வவழிபாடு தடைகளை விலக்கும். எதிர்பார்த்த உதவி வந்து சேரும்.
Mithunam
காரியங்கள் அனுகூலமாகும் நாள். சிலருக்கு எதிர்பாரா பணவரவு உண்டாகும். அரச பணிகளில் காரியங்கள் சாதகமாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். பணியிடத்தில் பணியாளர்கள் வேலை கூடும். லாபம் அதிகரிக்கும் தெய்வீக வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும். எதிர்பாரா உதவிகள் கிடைக்கும். வீண் விவாதத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
Kadakam
மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். காரியங்கள் வெற்றிபெறும். புது முயற்சிகள் சாதகமாக அமையும். செலவுகளுக்கு ஏற்ற பணவரவு உண்டாகும். வாழ்க்கைத் துணையால் மகிழ்சசி அதிகரிக்கும். தந்தை– தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிறிது அலைச்சல் ஏற்படும். லாபம் வழக்கம் போலவே காணப்படும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு கிடைக்கப்பெறும்.
Simmam
முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சாதகமாக காரியங்கள் நிறைவேறும். எதிர்பாரா நற்செய்தி தொலைதூரத்திலிருந்து கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உறவினர்களால் பணவரவு உண்டாகும். தெய்வ வழிபாடு நலம் தரும். சகோதரர்களால் வீண் சஞ்சலம் உண்டாக வாய்ப்புண்டு. பணியிடத்தில் தொழில் சிறக்கும். வாழ்க்கைத்துணையின் உறவுகளால் வீண் செலவுகள் உண்டாகும்.
Kanni
பிணக்குகள் நீங்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் உற்சாகத்துடன் செயற்படுவீர்கள். வாழ்க்கைத்துணையின் சிக்கனத்தால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. அயலவர்களால் சில பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புண்டு.
Thulaam
எதிரிகளால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும். தெய்வ வழிபாடு நலம் சேர்க்கும். உறவினர்களிடையே நற்செய்தி கிடைக்கும். புது முயற்சிகள் அனுகூலமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
Viruchchikam
மனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக சிந்திக்கத் தூண்டும். திறன்கள் அதிகரிக்கும் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் இன்று. காரியங்களில் சிறு சிறு தடைகள் உண்டானாலும் பாதிப்பு இருக்காது. சிலருக்கு தெய்வ வழிபாடு அதிகரிக்கும். எண்ணிய காரியம் நிறைவேறும். தொழிலில் சக ஊழியர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வீண் அலைச்சலைத் தவிருங்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
Thanusu
கையிருப்பில் இருக்கும் பணத்தை வீண் விரயம் செய்யாதீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. கலகலப்பான சூழ்நிலையை உருவாக்குவீர்கள். வாழ்க்கையுடன் அன்னியோன்யம் உண்டாகும். பணியில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் நீங்கும். எதிர்பார்த்த செய்தி தாமதமடையலாம்.
Maharam
சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். புது முயற்சிகளை தவிர்க்கவும் குடும்பப் பெரியவர்களின் அறிவுரையைப் பின்பற்றி நடந்தால் காரியம் வெற்றி பெறும். எப்போதும் போல் மனது உற்சாகமடையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி ண்டாகும். அயலவர்களிடையே வீண் பேச்சை குறையுங்கள். தந்தைவழிபால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
Kumbam
இன்று பணவரவு குறைவின்றி காணப்படும். வாழ்க்கையுடன் மகிழ்ச்சியான இடங்களுக்கு செல்வீர்கள். சில சங்கடங்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தந்தையுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சஞ்சலம் நீங்கும். புதிய முயற்சிகளை ஆரம்பிக்கலாம். தெய்வ வழிபாடு சித்தி தரும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அயலவர்களிடையே நன்மதிப்பு கூடும்.
Meenam
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்களுக்கு உதவுவீர்கள். பணியில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாரா உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு நலம் தரும். எதிர்பாரா செலவுகளும் உண்டாக வாய்ப்புண்டு. கடன் விடயத்தில் கவனத்தை கடைப்பிடிக்கவும். எதிரிகளால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் அகலும். மகிழ்ச்சி உண்டாகும்.
Leave a comment