இன்றைய ராசிபலன் : 16 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 16, 2024, குரோதி வருடம் ஆடி 31 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பொருளாதார வசதி சிறப்பாக இருக்கும். அதே சமயம் செலவுகள் அதிகரிக்க கூடிய நாள். இன்று உங்கள் கடினமான நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் உதவ முன் வருவார்கள். வியாபாரத்தில் நலம் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று புனித யாத்திரை செல்வதற்கான திட்டமிடல் செய்வீர்கள். உங்களின் மன அமைதி அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று பிள்ளைகள் தொடர்பான விஷயத்தில் மன அழுத்தம் ஏற்படும். சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பார்த்த காரியங்களை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இன்று அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய திட்டத்தில் ஈடுபடலாம். அலுவலகத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். குடும்பத் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உதவும். உங்கள் தாயுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்..
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழிலில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். வீட்டில் திருமணம், சுப காரியம் தொடர்பான முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். இன்று உங்களின் மன அழுத்தம் குறையும். இளமையாக உணருவீர்கள். தடைப்பட்ட வேலைகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். இன்று யாரிடமும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். ஆன்மீக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடும் மற்றும் ஆலோசனை உங்களின் கௌரவத்தை உயர்த்தும். நிதிநிலை முன்னேற்றம் அடையும். உங்களுக்கு லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும், அவர்களிடமிருந்து பரிசும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செயல்பாட்டில் நிதானமும், எச்சரிக்கையும் தேவை. உங்கள் வேலையை முடிப்பதில் தொய்வு ஏற்படும். வீட்டில் சுப காரியம் தொடர்பாக விவாதிப்பீர்கள். உங்கள் வீட்டிலும், சுற்றத்தாரிடமும் மோதல் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்துடன் எங்காவது செலுத்த முடியும். உங்களின் செயலில் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செயலால் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய திட்டத்திற்கான வேலையை தொடங்கலாம், உங்களின் முன்னோர் சொத்து தொடர்பான விஷயத்தில் சிக்கல்கள் உருவாக்கலாம். இன்று சில பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு உதவும். பல நாட்களாக தடைப்பட்டிருந்த உங்கள் வேlலை தொடர்பான விஷயங்கள் முடிக்க முடியும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோஸ்தருக்கு பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதுமையை கொண்டு வர முயல்வீர்கள். அதன் மூலம் நற்பலனை பெறலாம். இன்று உங்களுக்கு வயிறு வலி, அஜீரண பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். காதல் உறவு பலப்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்படவும். இன்று நீங்கள் வியாபாரத்தில் எடுக்கக்கூடிய சிறிய ரிஸ்க் மூலம் பெரிய லாபத்தைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேறு வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். தடைகள் நீங்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்ததாக இருக்கும். கூட்டு முயற்சிகள் வெற்றியை தரும். அன்றாட வேளையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவை எடுப்பீர்கள். இன்று ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்க வேண்டியது இருக்கும். அதனால் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபார ரீதியான விஷயத்தில் சிறப்பாக அமையும். தந்தையின் உடல்நிலை கவனம் தேவை. இன்று வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பு தொடர்பான விஷயத்தில் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவீர்கள். இன்று உடன் பிறந்தவர்களின் திருமணம் தொடர்பான தடைகள் விலகும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்கலாம். சிறப்பான லாபத்தை பெறலாம். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செயலில் பொறுமையும், நிதானத்தின் கடைப்பிடிக்க முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் செய்யக்கூடிய சிறிய முயற்சி கூட பெரிய பலனை தரும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
- 2024 raasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- nalaiya rasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- shelvi rasi palan in tamil
- shelvi rasi palan latest
- shelvi rasi palan today
- shelvi rasi palan vendhar tv
- sun tv rasi palan
- tamil rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- vendhar tv daily rasi palan