ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

Share
tamilnaadi 8 scaled
Share

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசியில் உள்ள அவிட்டம், சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். இதன் காரணமாக பணியிடத்தில் சில தவறுகள் ஏற்படலாம். இன்று சிலரின் ஆலோசனை உங்கள் கவலையை தீர்க்க உதவும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் நடக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி மனம் ஆறுதலை தரும். இன்று செலவுகள் விசயத்தில் கவனமாக இருக்கவும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பண பரிவர்த்தனை விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டி பெறுவீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் காதலை குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் பேச்சை குறைத்து செயலை அதிகரிக்க வேண்டிய நாள். இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நிதிநிலை வலுவாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் முடிக்க முடியாமல் கவலை அடைவீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன் தரக்கூடிய நாள். கல்வி, வேலை வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் இருந்த சிரமங்கள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்ய நினைப்பீர்கள். குடும்பத்தினருடனும், பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடந்த சில நாட்களை விட இன்று சிறப்பான பலன் தரக்கூடியதாக இருக்கும். இன்று தன லாபங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய வியாபார தொடக்கம் வெற்றியைத் தரும். மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று காலை வேளையில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முருகப்பெருமான் ஆலயத்தில் அபிஷேகம் செய்வது நல்லது. வண்டி, வாகனம் மாற்றுவது, வாங்குவது போன்ற விஷயங்களில் முடிவெடுக்கலாம். இது குறித்து நண்பர்களின் ஆலோசனை, உதவி மனதிற்கு ஆறுதலைத் தரும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். இன்றைய நாளில் நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவதற்கான நாளாக இருக்கும். இன்று கணபதி வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு ஆறுதல், திருப்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும். இன்று உங்களுக்கு சகோதர, சகோதரிகளுக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இன்று உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் நல்லாதரவு கிடைக்கும் என்பதால் மனம் மகிழ்ச்சி அடையும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சங்கடங்கள் தீரும். பல நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள், தடைப்பட்ட வேலைகள் சிறப்பாகச் செய்து முடிக்கலாம். சொத்து தகராறு, சிறு குடும்ப பிரச்னைகளை தீர்க்க முடியும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். ஆபத்து ஏற்படலாம். பண விவகாரங்களில் சற்று மன திருப்தி அற்றதாக இருக்கும். புதிய வியாபாரம், தொழில் தொடங்க வேண்டாம். வியாபார விஷயத்தில் கொடுக்கல், வாங்கலைச் சற்று ஒத்திப் போடுவது நல்லது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இன்று விநாயகர் வழிபாடு இந்த நாளை தொடங்க, வரக்கூடிய பிரச்னைகள், குழப்பங்களை சமாளிக்க முடியும். குழந்தைகளால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதும், நல்லெண்ணெய் வாங்கி தருவதும் நல்லது.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகம் மிகுந்த நளாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய நிலையும், அலைச்சலும் உண்டாகும். இன்று உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர வாய்ப்புகள் உண்டாகும். பிரிந்த நண்பர்கள் புரிந்து கொண்டு சேர்வர். இது மன ஆறுதல் தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...