rtjy 267 scaled
ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 22.10.2023 – Today Rasi Palan

Share

​இன்றைய ராசி பலன் 22.10.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் அக்டோபர் 22, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 5 ஞாயிற்றுக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் பத்தாம் இடத்தில் சனி உடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு, அலைச்சல்கள் உண்டு. குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலவும். இன்று சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பெருமாளை வணங்குவதும் மிகவும் சிறப்பு. ஆஞ்சநேயருக்கு இன்று வடைமாலை சாற்றுவது அல்லது வெண்ணெய் சாற்றுவதன் மூலம், ஜென்ம ராசியில் இருக்கக்கூடிய குரு,ராகுவுக்கு நல்ல பரிகாரமாக அமையும்.கேதுவின் அமைப்பாளர் உங்களுக்குச் சிறு சிறு உடல் நல பிரச்சினைகள் வந்து செல்லும். இன்று வாராகி அம்மன் வழிபாடு செய்வது நன்மை தரும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். மலைவேளையில் நல்ல செய்திகள் தேடி வரும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது. திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மன் வழிபாடு செய்வது சிறப்பான பலன் தரும். இன்று வீட்டு வேலை, வியாபாரத்தில் செய்யும் வேலையை மிகவும் கவனமாகச் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மீண்டும் தலை தூக்கலாம்.இன்று வீட்டில் திருமணம் தொடர்பான விஷயங்கள் விவாதிப்பீர்கள்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரியில் உருவாகும் அற்புத சுபயோகம்: சில ராசிக்கு தொழில் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்பு கிடைக்கும்​

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று லாபஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் உங்களுக்கு பல வெற்றிகளை தரக்கூடியவராக இருப்பார். சந்திராஷ்டம தினமாக இருந்தாலும் கூட மிருகசீரிடம் மற்றும் புனர்பூசம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறு சிறு மனக்குறை இருந்தாலும் வேலைகளில் வெற்றி பெற முடியும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அஷ்டமி திதியான இன்று பைரவர் வழிபாடு செய்யவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் இருக்கக்கூடிய குறைகள் தீரும். இருப்பினும் சந்திர பகவான் சனி உடன் சேர்ந்து இருப்பதால் கணவன் மனைவி இடையே சிறுசிறு மனக்குறைகள் வந்து செல்லும். இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருப்பின் அதை அதை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்வீர்கள். இன்று வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்கும் முன் நல்ல ஆலோசனை பெற்றிடுங்கள். இன்று நினைத்ததை விட கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் பல வகையான நல மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதி இருப்பதால் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். இன்று காலை வேளையில் உங்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மனதிற்கு இனிமை தரக்கூடிய நாளாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமாகப் பிரச்சனைகளுக்காக கடன் வாங்க நேரிடலாம்.யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சிறுதொழில் செய்பவர்கள் இன்று எதிர்பார்த்தபடி பலன் கிடைக்காததால் சற்று கவலையடைவார்கள். வெளிநாட்டில் இருந்து வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இன்று மாலை உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வீர்கள். சில அன்பான நபர்களை சந்திக்க மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் வாய்ப்புள்ள நாள். தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எங்காவது முதலீடு செய்ய வேண்டும் என்றால், அதை முழு மனதுடன் செய்யுங்கள். முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் முழு பலனைப் பெற முடியும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவ உங்கள் சில வேலைகளை ஒத்திவைப்பீர்கள்.இன்று பிஸியாக செயல்படக்கூடிய நாள். சில பருவகால நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் மூத்த நபர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும். இன்று நீங்கள் சகோதரர்களுடன் சில முக்கிய பிரச்சனைகளை விவாதிக்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வேலைப்பளு அதிகரிக்கும். சரியான திட்டமிடாமல் உங்கள் வேலையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியது இருக்கும். அதனால் எந்த வேலையை முதலில் செய்வது என்ற தெளிவு தேவை. குடும்ப உறுப்பினரின் செயல்பாடு கவலை தரும். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே நிலவும் தகராற்றில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியைப் பெறலாம். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இறை வழிபாடு செய்வீர்கள். .

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.அது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவதில் வெற்றிகரமாக இருக்கும். ஒரு முக்கியமான வேலையையும் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க நேரிடும். இன்று நீங்கள் குறைந்த லாபத்தில் திருப்தி அடைவீர்கள். உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படலாம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அது முடியுமோ இல்லையோ என்று யோசிக்காமல் செய்வீர்கள். இன்று மனதில் எதிர்மறை எண்ணத்தை விலக்கவும். உங்களின் சிறப்பாக செயல்படுவீர்கள். எதிரிகளால் நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். நீங்கள் புதிய நபருடன் பணம், பொருள் பரிவர்த்தனை செய்ய வேண்டியிருந்தால், அதை மிகவும் கவனமாக செய்யுங்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். உங்கள் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களால் இன்று மோசமான மனநிலையில் இருக்கலாம். உங்கள் இனிமையான வார்த்தைகளால் சக ஊழியர்களின் மனநிலையை மேம்படுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.உங்கள் குடும்பத்தில் சிலர் நோய்களால் பாதிக்கப்படலாம். இன்று வேலைகளை செய்து முடிக்க கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். உங்கள் பணியிடத்தில் சரியான மாற்றங்களைச் செய்தால், முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.

Share
தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...

MediaFile 1 4
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 27.10.2025

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின்...