ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
Rasi Palan new cmp 15 scaled
Share

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி 6, ஞாயிற்று கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம், கும்ப ராசியில் உள்ள சேர்ந்த அவிட்டம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய உறவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண உறவு வலுவடையும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்துடன் செயல்படுவார்கள். உங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். வாழ்க்கையில் சில மதிப்புமிக்க ஆட்களை சந்திக்க நேரிடும். அதனால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் சில பொன்னான வாய்ப்புகளை பெறலாம். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்று பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செல்ல விட வாய்ப்பு கிடைக்கும். கடினமாக உழைத்தல் சிறப்பான பலன் நிச்சயம் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலை தொடர்பாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களின் கனவுகளை நிறைவேற்ற கவனமாகவும், விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டிய நாள். இன்று தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அன்புக்குரியவர்களுடன் இன்ப பயணம் மேற்கொள்ளலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் ஆரோக்கியம் ஒத்துழைக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். புதிய உறவுகள், நண்பர்களை பெறலாம். வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும். உங்கள் செயலில் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் புதிய பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. மாணவர்களின் படிப்பில் ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய வேலைகள் மற்றும் புதிய நபர்களிடமிருந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான, அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் தரக்கூடிய நாள். பழைய முதலீட்டில் இருந்து நல்ல லாபத்தை பெறலாம். நிதிநிலை ரீதியாக முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பரிசுப் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்களின் உறவை மேலும் வலுப்படுத்தும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். பல சவால்களை சந்திக்க நேரிடும். என்று உங்களின் வேலைகளை மிகவும் கவனமாக செய்து முடிக்கவும். வேலைகளை முடிப்பதில் சரியான திட்டமிடல் அவசியம். ஆரோக்கியம் விஷயத்தில் கவனம் தேவை. மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்கவும். இன்று குடும்ப வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவது அவசியம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையும். இன்று வாழ்க்கையில் சில பொன்னான வாய்ப்புகளை பெறலாம். உங்களின் விருப்பங்கள் மற்றும், கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது. கடினமான உழைப்பின் நற்பலனை பெற்றிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியை பெறலாம். குடும்பத்தில் சில சலசலப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சிரமமான நாளாக இருக்கும். வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் உங்களின் கடினமான உழைப்பால் வெற்றிகரமாக சமாளிக்க முடியும்.. என்று உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் எண்ணத்தில் தெளிவாக இருக்கவும். நிதி விஷயத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். இன்று புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுக்கு செல்வ செழிப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் பல தடைகள் வரலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. உணவு பழக்க வழக்கத்தில் அக்கறையுடன் செயல்படுவோம். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள். என்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையிலும் அதீத ஆர்வத்துடன் ஈடுபட வேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கடுமையான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். வேளையில் வெற்றி பெற சிரமங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் காதல் மலரும். உத்தியோகஸ்தர்கள் வேலையை முடிக்க மிகவும் மும்முரமாக செயல்பட வேண்டிய நாள். அரசு வேலைக்காக தயாராக கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். என்று நீங்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். அன்றாட வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதல் விஷயத்தில் நம்பிக்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களின் கடினமான உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...