இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 16.09.2024 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம், கடக ராசியில் உள்ள சேர்ந்த புனர்பூசம், பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைத்தாலும் அதிருப்தி ஏற்படும். பிறர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. கவனமாக நடந்து கொள்ளவும். சில சேர்ந்து செய்யக்கூடிய விஷயத்தில் பண விரயம், சந்தேகம் ஏற்படும். உங்கள் பணியிடத்தில் கவனம் தேவை. பணம் தொடர்பான வாக்குவாதங்கள் ஏற்படலாம். முரட்டுத்தனமாக நடந்து கொள்வதைத் தவிர்க்கவும். உடல் நலத்தில் அக்கறை தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு லாபம் கிடைக்கக்கூடிய நாள். இன்று நீங்கள் நம்பிய சில விஷயங்களில் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். எந்த ஒரு வேலையும் முழு கவனத்துடன் செய்து முடிக்கவும். குடும்ப பொறுப்புக்களை கவனமாக செய்து முடிக்கவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சாதாரணமான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் ஆரோக்கியம் தடையாக இருக்கும். குடும்ப பொறுப்புகள் மற்றும் பணியிடத்தில் சில விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க முடியாது. உங்களின் தன்னம்பிக்கை குறையும். தேவையற்ற மனப்பிரச்சனையும், பண இழப்பும் ஏற்படலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தைரியம் அதிகரிக்கும். உங்கள் வேலையில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பு செய்தாலும் உங்கள் வேலையை முடிப்பதில் சிரமம் ஏற்படும். உங்கள் மனதில் அதிக யோசனைகள் ஓடும். இன்று அமைதியான மனநிலை மற்றும் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தொழிலில் லாபம், நஷ்டம் கலந்திருக்கும். உங்கள் நிதி நிலை குறைய வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். அதனால் உங்களின் அன்றாட பணிகளை திட்டமிட்டு செய்வது நன்மை தரும். உத்தியோகத்தில் வேலையை முடிக்க சிரமம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதாரம் விஷயத்தில் கவனம் தேவை. உங்களின் கௌரவம் அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன குழப்பம் நிறைந்ததாக இருக்கும். உங்களின் பெரிய திட்டத்தில் சிறிய லாபமே கிடைக்கும். உத்தியாகத்தில் புதிய சங்கடங்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். சளி, இருமல் என உடல் நல பிரச்சனை பாதிப்பைத் தரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். உங்களின் உடல் நலம் சீராக இருக்கும். பணியிடத்தில் நிலைமை சிறப்பாக இருக்கும். வியாபாரம், தொழில் சார்ந்த விஷயத்தில் நடந்த சாலைகளின் ஆலோசனை உதவும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயலில் கண்ணியமாக நடந்து கொள்ளவும். அரசு பணி விஷயத்தில் நல்ல செய்தி தேடி வரும். உங்களின் பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒழுக்கக்கேடான விஷயத்தில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை. வீட்டு சூழல் சிறப்பாக இருக்கும். எல்லா வேலைகளிலும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நிலையில் கவனம் தேவை.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் அதீத கற்பனையை நிறுத்தவும். உங்கள் வேலையை தள்ளி போட வேண்டாம். நிதி சார்ந்த விஷயங்களில் கவலை அதிகரிக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்தவும். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்ப பொறுப்புக்கள், செலவு தள்ளிப் போட நினைப்பீர்கள். தேவையற்ற கவலை உடல் நல பாதிப்பை ஏற்படுத்தவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நாளின் தொடக்கத்தில் தேவையற்ற வேலையில் ஈடுபடுவீர்கள். உங்களின் செயல்பாட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் அவமரியாதை ஏற்படும். உங்கள் பணியிடத்தில் மிகவும் கவனமாகவும், கடினமாகவும் உழைக்கவும். எதிரிகளை சிறப்பாக கையாள்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நன்மைகளை பெற முயல்வீர்கள். இன்று கடின உழைப்பு தேவைப்படும். கடந்த சில நாட்களை விட இன்று சிறப்பாகவும், வெற்றி கிடைக்க கூடிய நாளாகவும் இருக்கும். எதிலும் நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. வீடு, மனை தொடர்பான விஷயத்தில் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பயணம் அல்லது சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- jaya tv daily rasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today suntv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- zee tamil rasi palan