தீய சக்திகள் நீங்கி செல்வம் அதிகரிக்க சில வாஸ்துமுறைகள்
முன்னைய காலங்களில் மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் என்பவை காணப்பட்டன. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில் அதனுடன் பணமும் ஒன்றாக இணைந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாவிட்டால் வாழ்வது மிகவும் கடினமாகி விடும். பலரது மனஅழுத்தப் பிரச்சினையாக பணம் மாறிவிட்டது. தற்போது அனைவரின் பிரச்சினையும் வீட்டில் பணம் நிலைக்காமை தான். ஆனால் அவற்றை சில வாஸ்து குறிப்புக்களின் மூலம் சரி செய்து வீட்டில் செல்வ வளம் பெருக்க முடியும்.
நன்றாக பணம் புரண்டாலும் பணம் வீணாக செலவழிந்து கொண்டிருந்தால் தினமும் காலையில் பறவைகளுக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கினால் வீண் விரயம் தடைப்படும்.
வீட்டில் வடகிழக்கு பகுதியில் எந்தவொரு பொருள்களையும் வைக்காதீர்.
உங்கள் பணம் வைக்கும் இடத்தின்முன் கண்ணாடியை வையுங்கள். கண்ணாடியின் மீது பணம் மீண்டும் பிரதிபலித்து செல்வத்தை அதிகரிக்கும்.
வீட்டில் வைத்திருக்கும் மீன் தொட்டியை வடகிழக்கு பகுதியில் வைத்துப்பாருங்கள். உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
வீட்டில் உள்ள எந்தவொரு குழாயிலும் நீர் வடிந்தவாறு காணப்படின் உடனே அதனை சரிசெய்யுங்கள். இல்லாதுவிடின் அதிலிருந்து வெளியேறுகின்ற நீரைப் போல உங்கள் செல்வ வளமும் சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.
வீட்டின் நடுப் பகுதியில் எந்த ஒரு பொருள்களையும் வைக்காது விடின், வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
வீட்டில் இருந்து பணம் அதிகம் வீண் செலவினமாக வெளியேறுகிறது என்று உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருள்களை வைத்துப் பாருங்கள். பணம் நிலைத்து செல்வம் அதிகரிக்கும்.
Leave a comment