ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 19.07.2023 – Today Rasi Palan

Share
​இன்றைய ராசி பலன் 19.07.2023 - Today Rasi Palan
​இன்றைய ராசி பலன் 19.07.2023 - Today Rasi Palan
Share

​இன்றைய ராசி பலன் 19.07.2023 – Today Rasi Palan

இன்று 19ம் தேதி புதன் கிழமை, சந்திரன் கடக உள்ள பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இன்று நாள் முழுவதும் சித்த யோகம் உள்ளது. தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் முருகு பாலமுருகன் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.

மேஷம் இன்றைய ராசி பலன் – Aries

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று பணிபுரியும் இடத்தில் மனம் மகிழ்ச்சியாகவும், பண வரவும் இருக்கும். குடும்பத்தின் முக்கிய வேலைகளையும் செய்வதில் சகோதரரின் ஆலோசனை, ஆதரவு கிடைக்கும். மனைவியுடன் உறவு மேம்படும். இன்று எல்லா விஷயங்களிலும் ஓரளவு மகிழ்ச்சியின் நற்பலனைப் பெறலாம். நல்ல ஒப்பம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் ரீதியாக சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிரிகளாலும் போட்டியாளர்களாலும் தொல்லைகளை சந்திக்க நேரிடும். இன்று ஒரு புதிய வேலையைத் தொடங்க நல்ல நாள்.

நீங்கள் ஒரு புதிய வேலை, திட்டங்களை தொடங்க நினைத்தால், அது எதிர்காலத்தில் உங்களுக்கு மகத்தான பலன்களைத் தரும். இன்று உங்கள் மனைவியின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் வேலையை முன்கூட்டியே முடித்துவிட்டுச் சரியான நேரத்தில் வீட்டிற்கு செல்ல முயல்வீர்கள்.

மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini

மிதுன ராசியினருக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று கிடைத்த வாய்ப்பை அடையாளம் கண்டு அதில் கவனம் செலுத்துவது உத்தமம். இன்று உங்கள் குழந்தையின் முன்னேற்றம் தொடர்பான சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று வாகனத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். நினைத்ததை விட அதிகம் செலவழிக்க வேண்டியது இருக்கும்.

கடகம் இன்றைய ராசி பலன் – Cancer

திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு ஏற்றம் தரக்கூடிய நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவைகளில் தீர்வையும் உடனே பெறுவீர்கள்.மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் நீண்டகாலமாக சந்திக்காமல் இருந்த நண்பர்களும் உறவினர்களும் உங்களைத் தொடர்புகொள்ள இன்று வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகள் நன்றாக இருக்கும்.

சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
நேயர்களுக்கு இன்றைய நாள் செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் சற்று கவனம் தேவை புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும் பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்

கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
நேயர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது

நல்லது பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

துலாம் இன்றைய ராசி பலன் – Libra
நேயர்களுக்கு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும் ஒருசிலர் வீடு வாங்குவது சொத்துக்கள் வாங்குவது அல்லது வாகனங்கள் வாங்குவது தோன்றிய போன்ற சிந்தனைகள்அதிகம் ஏற்படும்.

நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு உயர்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியில் முடிவடையும்.

விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தனவரவு உண்டு.

சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும். ஒரு சிலருக்கு வலி நல்லது, முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள். சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு உடல் அசதி அதிகமாக இருந்து வரும். தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது.

கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை விநாயகப் பெருமானை வழிபடவும்.

மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் குடும்பத்தில் உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் நாள் ஆகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் உயர் கல்வியை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றியடையும் நாளாகும்.

கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.

தன வரவு உண்டாகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு தாய் வழி சொந்தம் வந்ததால் மற்றும் நண்பர்களால் தனவரவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கும் கணக்குத் துறை உணவுத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும்.

உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...