இன்றைய ராசி பலன் 22.07.2023 சனிக் கிழமை – Today Rasi Palan
இன்று 22ம் தேதி சனிக்கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளது. இன்று நாள் சித்த யோகம், மரண யோகம் கலந்த நாள். இன்றைய தினத்தில் அவிட்டம், சதய நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஜோதிட நிபுணர் முருகு பாலமுருகன் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.
மேஷம் இன்றைய ராசி பலன் – Aries
நண்பர்களுக்கு இன்றைய நாள். சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும், புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். இவைகளில் வெற்றியும் காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
இந்த 5 ராசி பெண்களுக்கு அழகான கணவன் அமைவார்களாம்!
ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் எதிர்பார்த்த பணம் வரும். போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு.
பிறக்கும் போதே ராஜயோகத்துடன் பிறக்கக்கூடிய 4 ராசிகள் – உங்கள் ராசி இதில் இருக்கா?
மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும் வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்
ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம்.
கடகம் இன்றைய ராசி பலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
திருமணம், உடலுறவு இந்த நாட்களில் வைத்துக் கொண்டால் பிரிவு ஏற்படும்
சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும்.
ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர். இவைகளில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாடாக இன்றைய நாள் அமையும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும்.
கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எனக்கு கல்வி நன்றாக இருக்கும். கணிதப் பாடத்தில் தேர்ச்சி சிறப்பாக இருக்கும். பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.
ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள். உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும்.
துலாம் இன்றைய ராசி பலன் – Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த பணம் வரும். வங்கி கடன் சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியடையும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நன்மையில் முடிய காண்பார்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணும் நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நன்றாக நடைபெறும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும்.
விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே சென்ற காரியங்கள் வெற்றியில் முடியும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள். தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும் அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள்.
தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் வாகன வகையில் அனுகூலம் உண்டு. பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.
சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம் தாய் வழி சொந்தம் வந்தது சற்று வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று பொறுமையை கடைபிடிப்பது மற்றும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது.
மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை சமாளித்து வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் இவைகளில் வெற்றியே உண்டாகும் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருந்துவரும்.
ஒரு சிலர் உயர்கல்விக்காக வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியது வரலாம். கணவன் மனைவி உறவு நெருக்கம் சிறப்பாக இருக்கும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.
கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளா வே துவங்கும். கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை மொழிப்பாடம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவத்துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பானதொரு உயர்வை காண்பார்கள்.
மாணவர்களின் கல்வி மேம்படும் உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்.
- 2023 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumbam rasi palan 2024 in tamil
- meenam rasi palan 2024 in tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2021
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
Leave a comment