இன்றைய ராசி பலன் 1812.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2023, சோபகிருது வருடம் மார்கழி 2 திங்கட் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்ததாக இருக்கும். வரவை மனதில் வைத்துக்கொண்டு செலவுகளை செய்யவும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட சிறப்பான லாபத்தை சம்பாதிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையை நல்ல சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் சம்பந்தமான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். சகோதரர், சகோதரிகளின் நல்ல ஆதரவும், அவர்களுடன் நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் மனச்சுமையை உங்களுக்கு பிடித்தவரிடம் பகிர்ந்து மன ஆறுதல் அடைவீர்கள். இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மூலம் சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.பிரச்சினைகளை சமாளிக்க மூத்தவர்களின் நல்லா ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். இன்று உங்களின் வேலைகள் சரியான நேரத்தில் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் மூத்தவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வேலை முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். உடல்நிலை ம்மந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. எந்த ஒரு வேலையிலும் அக்கறையும், நிதானமும் தேவை. உங்கள் பேச்சில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். இன்று ஏழைகளுக்கு சேவை செய்வதிலும் தொண்டு செய்வதிலும் நேரத்தை செலவிடுவது நல்லது.இன்று நண்பர்களிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சில் இனிமேல் கடைப்பிடிக்கும். முக்கிய முடிவுகளை இரண்டு நாட்களுக்கு தள்ளி வைக்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தந்தை மற்றும் பெரியவர்களின் நல்ல ஆலோசனை கிடைக்கும். அதன் மூலம் உங்களின் தொழிலில் உள்ள பல பிரச்சனைகளை தீர்க்க முடியும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. என்று உங்களின் நிதிநிலைமை மேம்படும். குடும்பத்தை திருமணம், உள்ளிட்ட மங்கள நிகழ்வுகள் குறித்து விவாதிப்பீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நீதிமன்ற வழக்கு அல்லது சொத்து சம்பந்தமான விஷயங்களை சாதகமான முடிவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். இன்று விருந்து விழாக்களை ஏற்பாடு செய்தல், கலந்து கொள்ளுதல் போன்றவற்றில் வாய்ப்புள்ளது. இன்று உங்களின் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தருவதாக இருக்கும். உங்களுக்கு கடன் வாங்கக்கூடிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று எந்த ஒரு பெரிய முடிவையும் சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பதால், பிரச்சனைகளை தீர்க்க முடியும். குழந்தைகளின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும்.மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கக்கூடிய சாதக வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் நிதானத்தையும், பேச்சில் இனிமையையும் கடைப்பிடிக்கவும். இன்று கடன் வாங்குதல், கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். எதிர்காலத்தை பயன்படுத்த ஆசிரியர்களின் சில ஆலோசனை கிடைக்கும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் தாயின் உடல் நலம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை வாங்க நினைப்பவர்களின் கனவு நனவாகும். இன்று உங்களின் நேர்மையான செயல்பாடுகள் பாராட்டையும், மன நிறைவையும் பெற்றுத்தரும். குடும்ப வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். மனைவியிடம் இருந்து போதுமான ஆதரவும், தோழமையையும் பெறுவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் குடும்பத்தில் சில வாக்குவாதங்கள், மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். இல்லை எனில் உறவில் விரிசல் ஏற்படும் .
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிக்கவும், நல்ல லாபத்தையும் பெற முடியும். சொத்து சம்பந்தமான ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவையும், பாராட்டையும் பெறுவீர்கள். உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடித்தால் மரியாதை அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆளுமை மேம்படும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில பின்னடைவும், லாபம் குறையவும் ஏற்படலாம். உங்களின் எதிர்காலம் திட்டம் குறித்து யோசிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாகவும், பிள்ளைகளின் செயல் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும். பிள்ளைகளின் வேலை தொடர்பான விஷயங்களை நல்ல செய்தி கிடைக்கும்.
- 2023 rasi palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- daily rasi palan zee tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- indraya rasi palan zee tamil
- k p vidyadharan today rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- rasi palan today zee tamil
- shelvi rasi palan today
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- zee tamil rasi palan today