ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 17.07.2023) இன்று ஆடி அமாவாசை – Horoscope Today, 17 June

Share
இன்றைய ராசி பலன் 17.07.2023) இன்று ஆடி அமாவாசை - Horoscope Today, 17 June
இன்றைய ராசி பலன் 17.07.2023) இன்று ஆடி அமாவாசை - Horoscope Today, 17 June
Share

இன்றைய ராசி பலன் 17.07.2023) இன்று ஆடி அமாவாசை – Horoscope Today, 17 June

இன்று 17 ஜூலை 2023 திங்கட் கிழமையில் சந்திரன் மிதுன ராசியில் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். அமாவாசை திதி நடக்கக்கூடிய இன்று அமிர்த யோகம் சுப தினம். இன்று விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டம நாள். சிம்ம, கன்னி ராசிக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். 12 ராசிக்கான ராசி பலன் எப்படி இருக்கும் தெரிந்து கொள்வோம்.

மேஷம் இன்றைய ராசி பலன் – Aries

இன்றும் உங்களுக்கு சாதகமாக நாளாக இருக்கும். வியாபாரத் துறையில் போட்டிகள் இல்லாததால், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் வேலை காரணமாக சில காலம் சங்கட, கோபம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மதியம் வரை வேலையில் தீவிரம் காட்டுவீர்கள். வேலையில் கவனம் இருக்காது. பொருளாதார நிலை தொடர்ந்து மேம்படும். உங்கள் விருப்பங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். வரவு-செலவுத் திறனைக் காட்டிலும் அதிகமாகச் செலவழிப்பீர்கள்.வீட்டில் அமைதி நிலவும்.

ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். திடீர் பண வரவால் வீண் செலவுகள் இருக்காது. சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவதால் குடும்ப கௌரவம் உயரும். சக ஊழியர்களுடனான ஒருங்கிணைப்பு இல்லாததால் வேலை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

வருமானம் சரியான அளவில் இருக்கும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதோடு, சுபகாரியங்களுக்காக அதிகரிக்கச் செலவுகள் ஏற்படும். வீட்டில் உறவினர்கள் வருகையால் சுறுசுறுப்பு ஏற்படும். எதிர்காலத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini

இன்று உங்களின் சுபாவம் ஓரளவு கவலையாக இருக்கும். வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, நாம் பிடிவாதத்துடன் ஈடுபடுவீர்கள். இது குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்களையும் சிக்கலில் ஆழ்த்தும்.

பணியிடத்தில் அவசரம் அல்லது தன்னிச்சையாக முடிவெடுப்பது போன்ற விஷயங்களால் லாபம் குறையும். இன்று பணம் சம்பந்தப்பட்ட வேலைகளை தகுந்த ஆலோசனைக்குப் பிறகு செய்வது நல்லது. பொதுவாக, வீட்டில் சூழ்நிலை அமைதியாக இருக்கும்.

கடகம் இன்றைய ராசி பலன் – Cancer

கணவன் மனைவி உறவு உடையதாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் .சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு மற்றும் தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைத்தல் போன்ற மகிழ்ச்சியான நாடாக இன்றைய நாள் செல்லும்.

சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மையான நிலையை அடைவார்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்குப் படிப்பை முடித்து வேலைவாய்ப்பை வைத்து இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இன்டர்வியூ முடித்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வயதானவர்களுக்கு கண் மற்றும் கால்களில் சற்று பிரச்சனைகள் வந்து நீங்கும் மாணவர்களுக்கு கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை.

கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவர்களுக்கு கல்வி திறம்பட அமையும்.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இன்று நிறைவேற்றுவீர்கள். மாலையில் எதிர்கால சேமிப்பு மற்றும் சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் திட்டமிடுவீர்கள் .

துலாம் இன்றைய ராசி பலன் – Libra
அன்பர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் தனவரவு உண்டு. புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள் குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பது காண வாய்ப்பு உண்டு.

உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
நண்பர்களுக்கு நல்ல நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் சொத்து வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அலைச்சல்கள் போக போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இவற்றில் கவனம் தேவை மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் கல்விச் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு.

தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும் சிறிய அளவில் வேலைப்பளு இருந்தாலும் அவைகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். ஆன்மீகத் துறையிலும் ஆயில் அண்ட் கேஸ் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு.

​வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சாதகமான ஒரு நாள் இன்றைய நாள் ஆகும் வகையில் ஆதாயம் உண்டாகும்.

மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் சந்தோஷமும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும் வேலையில் இடமாற்றத்தை எதிர் நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற நிலையை காண்பார்கள் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன்னே வந்து நிற்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். தனவரவு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இருந்து வந்த பணப் பற்றாக் குறைகள் நீங்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது நீண்ட கால முதலீடுகள் செய்வது போன்றவற்றில் மனம் செல்லும் இவைகளில் வெற்றியும் காண்பீர்கள்.

மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பிரயாணத்திற்கு வாய்ப்புண்டு என்பதால் உங்கள் பிரயாணங்களால் வெற்றி அடைவீர்கள் ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். ஜெயம் கிடைக்கும்

வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...