இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2024, சோபகிருது வருடம் பங்குனி 24, சனிக் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுன, கடக ராசியில் உள்ள புனர்பூசம், பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய சொத்துக்கள் வாங்கும் விருப்பம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்கள் ஆக திருமண வாழ்க்கையில் இருக்க கூடிய மன வருத்தங்கள் முடிவுக்கு வரும். எந்த ஒரு வேலையிலும் அதே நம்பிக்கையுடன் செயல்பட வேண்டாம். சரியாக திட்டமிட்டு செயல்படவும். பெற்றோரின் அன்பும், ஆசியும் பெறவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய நாள். சில தேவையற்ற செலவுகள் உங்களை தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். இன்று உங்கள் துணையுடன் பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக அலைந்து திரிய வேண்டிய சூழல் இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வரவுக்கேற்ற செலவுகளை திட்டமிட்ட செய்யவும். சில புதிய செலவுகள் கூடுதல் சுமையை தரக்கூடியதாக இருக்கும். உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து, சில கவலைகள் ஏற்படும். சிக்கலான நேரத்தில் குடும்பத்தின் மூத்தவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் இருந்து வெளிவர வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது தினம். இன்று எந்த ஒரு வேலையிலும் அலட்சியமாக செயல்பட வேண்டாம்.பணத்தை முதலீடு செய்வதற்கு முன் சரியான யோசனையும், நலம் விரும்புகிறேன் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. இல்லை எனில் தேவையற்ற சிக்கலை சந்திக்க நேரிடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று வேலை தேடக்கூடிய நபர்களுக்கு புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு நல்ல லாபத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். நிதி சார்ந்த சிக்கல்களை சிறப்பாக சமாளித்து தீர்க்க முடியும். வெளியூர், வெளிநாடு செல்லும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சார்ந்த விஷயத்தில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பதில் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று . நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு உடல்நல பிரச்சனைகள் பற்றி கவலை ஏற்படும். பணியிடத்தில் உங்கள் வேலைகளில் சிந்தித்து செயல்படுங்கள்.உங்கள் பேச்சில் நிதானமும், கனிவும் தேவை. என்று முடிந்த வரை பெரிய பண பரிவர்த்தனைகளை செய்வதை தவிர்க்கவும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட இன்று உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில், வியா பங்குதாரர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சமூக நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறலாம். பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நம்பிக்கையுடன் தொழில் செய்ய வேண்டிய நாள். குடும்பத்திற்கான செலவுகள் அதிகரிக்க . வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு பெரிய முதலீடு திட்டத்திலும் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில், சக ஊழியர்களுடன் கவனமாக பழகவும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. குழப்பமான சூழலில், வாழ்க்கை துணையின் அறிவுரை நல்ல பலன் அளிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் பலனளிக்க கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். நேரத்தை வீணடிக்காமல் வேலையில் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முயலவும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்பு அமையும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் உங்களின் கனவு நிறைவேறும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்வீர்கள். சில நிலுவையில் உள்ள வேலைகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். என்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் நற்பலன் கிடைக்கக்கூடிய நாள். தொழிலதிபர்கள் எதிர்பார்க்க லாபத்தை பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுவீர்கள். தாயுடன் இருக்கக்கூடிய மனக்கசப்பு தீர்ந்து அவரின் அன்பு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். நான் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும். நீங்கள் மற்றவர்களிடம் வாங்கியுள்ள கடனை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள். மாமியார் வீட்டிலிருந்து மரியாதை அதிகரிக்கும். தொழில் சார்ந்த விஷயத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீரும். உங்களின் ரகசியங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- 2024 raasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- daily rasi palan tamil
- dhina rasi palan
- dhinasari rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- jaya tv daily rasi palan
- jaya tv rasi palan today
- march raasi palan
- nalaiya rasi palan
- raasi palan
- raasi palan paavangal
- rasi palan
- rasi palan 2024
- rasi palan 2024 in tamil
- rasi palan today
- rasi palan today tamil
- tamil rasi palan
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil