ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 05.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
Rasi Palan new cmp 3 scaled
Share

இன்றைய ராசி பலன் 05.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூன் 05, 2024, குரோதி வருடம் வைகாசி 23, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு, எளிதாக கிடைக்கும் வருமானத்தில் கவனம் செலுத்த மாட்டீர்கள். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. பெரியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடக்கவும். உங்களின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். சகோதரர்களுடன் உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான பலன் கிடைக்க கூடிய நாள். குடும்பத்துடன் ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளது. இன்று விருந்து விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. உங்களின் இதே நிலை மேம்படும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். எந்த ஒரு முக்கிய வேலையும், முதலீட்டிலும் சகோதரர்களிடம் கலந்த ரசித்து செய்யவும். எதிர்காலம் தொடர்பான முக்கிய திட்டங்களில் ஈடுபடுவீர்கள். புதிய வேலை, தொழில் தொடங்குவது தொடர்பாக மனைவியின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் எடுக்க முடிவின் மூலம் முழு பலனை பெற்றிடுவீர்கள். உங்களின் ஆலோசனை இதற்கு சிறப்பான பலன்களை தரும். இன்று முடிக்க வேண்டிய பணிகளை சரியாக திட்டமிட்டு செயல்படுவோம். இன்று சில வணிகத் திட்டங்கள் நல்ல வேகம் பெறும். மாணவர்கள் தேர்வு, விளையாட்டில் நல்ல வெற்றியை காணலாம். இன்று பிறரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதில் சிந்தித்து செயல்படவும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கலையான பலன் தரக்கூடிய நாள். வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி செய்யக்கூடியவர்களின் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலைகளில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கவனமாக கடைப்பிடிக்கவும். பிள்ளைகளின் தொழில் ரீதியாக கொஞ்சம் மன அழுத்தம் ஏற்படும். உங்களின் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம், தொழிலில் பெரிய சாதனை படைக்கலாம். இன்று உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாள். அரசு வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதில் பல சிந்தனைகள் குழப்பத்தையும், மன அழுத்தத்தையும் தரக்கூடியதாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூகம் தொடர்பான பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு செல்வம் செழிப்பு அதிகரிக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். பெரியவர்கள் விஷயத்தில் மதித்து நடப்பதும், ஆலோசனையையும் கிடைக்கும். இன்று குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையை செய்ய சில வேலையாட்களின் ஆலோசனை பெற வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சிறப்பான முயற்சி அடைவார்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனம் தேவை. முக்கியம் முடியவில்லை எடுப்பதை தவிர்க்கவும். இருப்பினும் உங்களின் செயல்களை நல்லா வெற்றியும், அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியை பெறுவீர்கள். இன்று வேலை தொடர்பான பயணம் செல்ல நேரிடும். பயணம் அனுகூலமானதாக இருந்தாலும் உடல் நலத்தில் அக்கறை தேவை

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனமாக முன்னேற வேண்டிய நாள். எந்த விஷயத்திலும் ஆபத்தான முயற்சிகளை எடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நல பிரச்சனை உங்களின் வேலைகளை முடிப்பதில் பிரச்சனை தரும். பணியிடத்திலும் உள்ள விதிகளை, ஒழுங்கு முறைகளை கவனமாக கடைப்பிடிக்கவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்ய நினைக்கக்கூடிய எந்த ஒரு வேலையிலும் தயக்கம் இன்றி திட்டமிட்டு செயல்படவும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் உங்கள் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் இந்த தைரியம், வீரம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் வேலை அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொல்லைகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். உங்களின் புதிய முயற்சிகள் இன்று நல்ல பலனளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். எந்த ஒரு வேலையிலும் மிகவும் சிந்தனையுடன் செயல்பட வேண்டிய ஆனால். உங்களின் இனிமையான பேச்சு, மரியாதை பெற்றுத் தரும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் உற்சாகம் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் அன்பு ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் மன சுமையிலிருந்து விடுபடுவார்கள். பணியிடத்தில் உங்களின் திறமையை நிரூபிக்கவும், இலக்கை அடையவும் வாய்ப்பு உள்ளது. பெற்றோருடன் ஆன்மீகப் பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நிதி ரீதியாக முன்னேற்றம் தரக்கூடிய நாள். மூத்தவர்களின் அன்பு ஆதரவும் கிடைக்கும். பணியிடத்திலே யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலை தொடர்பான அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை கிடைக்கும். வியாபாரம் செய்யக்கூடிய அவர்களுக்கும் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம். இன்று முக்கிய பணிகளை சரியாக திட்டமிட்டு வெற்றி கிடைக்கும். இன்று பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...