tamilnaadi scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 1 ஜனவரி 2025 – Daily Horoscope

Share

இன்றைய ராசி பலன் : 1 ஜனவரி 2025 – Daily Horoscope

Happy New Year: இன்றைய ராசிபலன் 1.01.2025, குரோதி வருடம் மார்கழி 17, புதன் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜனவரி 1, 2025 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று ரிஷபம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவ நினைப்பீர்கள். இன்று தொண்டு பணியில் ஈடுபடுவீர்கள். உங்கள் பணியிடத்தில் சில மாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தில் சாதகமான சூழல் இருக்கும். துணையுடன் உள்ள மன வருத்தம் விலகும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில நல்ல செய்திகள் தேடி வரும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.இன்று செலவுகளைக் கட்டுப்படுத்தவும். நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த வேலை ஒன்றன்பின் ஒன்றாக முடியும். இன்று உங்கள் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமையான அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். சகோதரத்துடன் கருத்து வேறுபாடுகளை ஏற்பட வாய்ப்புகள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல வாய்ப்புள்ளது. சில நல்ல செய்திகள் தேடி வரும். தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு சாதகமான நாள். சுய தொழில் தொடங்க சாதகமாக சூழல் அமையும். பணியிடத்தில் உங்களின் ஆலோசனை வரவேற்கப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கும். மக்களின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பான உறுப்புகளை நிறைவேற்ற மகிழ்வீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தைக் கவனம் தேவை. இன்று எதிர்பார்த்ததை விட செல்வங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பணம் பற்றாக்குறை சந்திக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் வேலை தடைப்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சரியாக திட்டமிட்டு செயல்படவும். இன்று எதிர்பார்த்த மன ஆதாயங்கள் பெற்று மகிழ்வீர்கள். இன்று பெற்றோரின் ஆசியை பெற்று செய்யக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். இன்று யாரிடம் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அதனால் மனம் சற்று வருத்தம் அடைவார்கள். இன்று உங்கள் பேச்சு, செயலில் நிதானம் அவசியம். அரசு வேலை தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்தீர்கள். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு உதவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வம் அதிகரிக்கும். உங்கள் வேலை, முதலீடு தொடர்பான விஷயங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளையும் முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் மன மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுபவர்கள். விருப்பங்கள் நிறைவேறும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீடு மற்றும் வியாபாரம் தொடர்பாக சில செல்வங்களை சந்திக்க நேரிடும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவுகளை செய்வது நல்லது. சொத்து வாங்குவது தொடர்பாக உங்களின் முயற்சிகள் சாதக பலனை தரும். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும். பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சொந்த தொழில் செய்யக்கூடியவர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. வாகனம் தொடர்பாக பண செலவுகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் முன்னர் செய்துள்ள முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தாயின் உடல்நிலை சற்று மோசம் அடைய வைத்துள்ளது. இன்று உணவு மற்றும் பானங்கள் மீது கட்டுப்பாடு அவசியம். அசையும், அசையா சொத்து வாங்கும் விஷயத்தில் ஆவணங்களைச் சரி பார்க்கவும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். நீங்கள் முன்னெடுக்கும் வேலையில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய முயற்சியில் சிறப்பான வெற்றி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு, கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடைய பரஸ்பர அன்பு இருக்கும். பிள்ளைகள் தொடர்பாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும்.

Share
தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...