இன்றைய ராசிபலன் 15.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசிமாதம் 1, வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் பரணி, கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டிலும், பணியிடத்திலும் உங்களின் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்ற சரியான ஒழுக்கமும், திட்டமிடல் அவசியம். சில விஷயங்களால் உங்களின் உடல் நலம் பெற வாய்ப்பு உண்டு. இன்று உடல் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். இன்று நல்ல வருமானம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சுவாரசியமான நாளாக இருக்கும். உங்கள் வேலையிலும் மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று சிலர் உங்கள் வேலையை தடுக்க முயற்சி செய்வார்கள். இன்று பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். முன்னர் செய்த கடின உழைப்பிற்கான லாபம் கிடைக்கும். வீட்டின் சூழல் சாதகமற்றதாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று லாபம் தரும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் சில குழப்பங்கள் வரலாம். அதை உங்கள் போட்டியாளர்கள் சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மதியம் வரை அலைச்சல் அதிகமாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஏனென்றால் அது பின்னாளில் வருத்தத்தை தரலாம். வீட்டில் உணவு மற்றும் இதர வசதிகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். பணியிடத்திலும் செலவுகள் இருக்கும். மாலையில் பண தொடர்பான பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்படுவார்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குழப்பம் காரணமாக வேலை இல்லாமல் போகலாம். நீங்கள் விரும்பாத சூழல் நிலவும். ஆனால் பொறுமையாக இருங்கள். இந்த நிலை சிறிது நேரம் மட்டுமே இருக்கும். மதியத்திற்குப் பிறகு நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். இன்று உங்கள் திட்டங்களில் முழு வெற்றி கிடைக்காது. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி சில விஷயங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும். பண வரவு இன்று சீராக இருக்கும். மாலையில் குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று உடல்நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மதியம் வரை அமைதியாக இருக்க வேண்டும். தொழில் காரணங்களால் மன அமைதி இல்லாமல் போகலாம். வீட்டு பிரச்சனைகள் காரணமாக அதிக அழுத்தத்துடன் வேலை செய்ய வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் வரலாம். இதனால் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அதிருப்தி அடைவார்கள். அதே நிலைதான் பணியிடத்திலும் இருக்கும். உங்கள் கூட வேலை செய்பவர்கள் அல்லது அதிகாரிகள் உங்கள் தவறுக்காக காத்திருப்பார்கள். பண சம்பந்தப்பட்ட விஷயங்களும் மனஸ்தாபத்திற்கு காரணமாகலாம். முக்கியமான வேலைகளை முடிப்பதற்கு மாலை வரை காத்திருப்பது நல்லது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். காலையில் நீங்கள் செய்யும் கடின உழைப்பிற்கான பலன் மதியத்திற்குள் கிடைக்கும். இன்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். ஏனென்றால் மதியத்திற்குப் பிறகு சூழ்நிலைகள் மோசமாகி எல்லா வேலையும் தடைப்படலாம். லாபத்திற்கு பதிலாக நஷ்டம் வர வாய்ப்புகள் அதிகம். மனதளவில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். ஆனாலும் சோம்பேறித்தனத்தால் வேலை தாமதமாகும். இன்று வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். கூட வேலை செய்பவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இன்று உணர்ச்சிவசப்படுவார்கள். இதனால் சூழ்நிலையை சமாளிப்பது கடினமாக இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சோம்பேறியாக இருப்பீர்கள். எந்த வேலையும் செய்ய ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள். இதனால் லாபம் குறைவாக கிடைக்கும். இன்று நீங்கள் உண்மையை விட்டு கற்பனை உலகில் மூழ்கி இருப்பீர்கள். உங்களால் முடியாத விஷயங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பணம் சம்பாதிக்க யாருடைய உதவியாவது உங்களுக்கு தேவைப்படும். இன்று உடல் ரீதியாக இல்லாமல் மன ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம். மதியத்திற்குப் பிறகு எதிர்காலத்தில் லாபம் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும். எந்த குழப்பத்திலும் சிக்க வேண்டாம். வீட்டில் ஒருவருடன் சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். திடீர் பண ஆதாயத்திற்காக உங்கள் ஆரோக்கியத்தை மறந்துவிடுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பண ஆதாயம் கிடைக்கும் நாள். ஆனால் உங்கள் வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் லாபத்திற்கு பதிலாக சிலருடன் தகராறு ஏற்படலாம். முக்கியமான வேலைகளை மதியத்திற்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள். இன்று லாபம் சம்பாதிப்பது எளிது போல் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக இருக்காது. வேலைகளை சிறியதாக நினைத்து பின்னர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் தந்திரமான கொள்கைகளை பின்பற்றுவார்கள். இதனால் விற்பனை அதிகமாகும். ஆனால் சரியான லாபம் கிடைக்காது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மதியம் வரை எந்த முக்கியமான முடிவும் எடுக்க வேண்டாம். இல்லையென்றால் நஷ்டம் ஏற்பட்டு மனச்சோர்வு அடைவீர்கள். இன்று உங்கள் அன்றாட வாழ்க்கை குழப்பமாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் வரும். வேலையில் கவனக்குறைவாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அல்லது கூட வேலை செய்பவர்கள் சரியான ஆலோசனை கொடுப்பார்கள். ஆனால் நீங்கள் தவறாக புரிந்து கொள்வீர்கள். மதியத்திற்குப் பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். ஆனாலும் பணம் சம்பந்தப்பட்ட வேலைகளை தள்ளி வைப்பது நல்லது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட வேலைகளைத் தவிர மற்ற எல்லா வேலைகளிலும் மதிப்பு பெறுவீர்கள். நாள் முழுவதும் பண பிரச்சனைகள் ஏதாவது ஒரு வகையில் உங்களைத் தொந்தரவு செய்யும். வேலையை சரியான நேரத்தில் முடித்தாலும் பணத்திற்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு பெரியவரின் ஆதரவு கிடைப்பதால் சில சிக்கல்களிலிருந்து விடுபடலாம். மதியத்திற்குப் பிறகு சமூக சேவைக்காக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பம் அல்லது உறவினர்களுடன் நேரம் செலவிட வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நேற்றை விட சற்று நிம்மதியாக இருப்பீர்கள். உடல் நலம் மேம்படும். அதிக வேலைப்பளு ஆரோக்கிய பிரச்னை தரும். நாள் முழுவதும் வேலையைப் பற்றிய மன கவலை இருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல் ஏற்படும் மதியத்திற்குப் பிறகு ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் சுயநலம் அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களின் அனுதாபம் கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மதியத்திற்குள் உங்களின் திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பது நல்லது. உடல் பலவீனமாக இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் தாமதம் ஏற்படலாம். வேலை செய்பவர்கள் இன்று ஏதாவது ஒரு குழப்பத்தில் சிக்கிக் கொள்வார்கள். மதியம் வரை கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காததால் ஏமாற்றம் ஏற்படும். நாள் முழுவதும் செய்த கடின உழைப்பு மாலை நேரத்தில் சிறப்பான பலன் தரும். நல்ல செய்தி வருவதால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனாலும் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.
- 2025 new year rasi palan
- 2025 rasi palan
- 2025 rasi palan in tamil
- daily rasi palan
- dina rasi palan
- Featured
- indraya raasi palan
- indraya rasi palan
- nalaiya rasi palan
- new year rasi palan 2025
- new year rasi palan 2025 in tamil
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan 2025
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today tamil
- sun tv rasi palan
- tamil raasi palan
- tamil raasi palan today
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- weekly rasi palan