tamilnaadi scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 2 மார்ச் 2025 – Daily Horoscope

Share

இன்றைய ராசி பலன் : 2 மார்ச் 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.03.2025, குரோதி வருடம் மாசி மாதம் 10 ஞாயிற்று கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள சேர்ந்த ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், அவர்களிடம் இருந்து நல்ல செய்தியும் கிடைக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும். இன்று உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவது நல்லது. அதிகரித்து வரும் செலவுகளால் குடும்பத்தில் சில பதட்டமான சூழல் இருக்கும். பண பரிவர்த்தனை தொடர்பாக தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நிதிநிலை மேம்படும். நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் பேச்சு, செயலில் கவனம் தேவை. சிலர் உடல் நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். படிப்பு, விளையாட்டுப் போட்டிகளில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில், துணையிடமிருந்து பரிசு கிடைக்கும். இன்று உங்களின் எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் விஷயத்தில் யோசித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் மூலம் பண வருவாய் கிடைக்கும். உங்களின் செல்வம் அதிகரிக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்று வேலையில் பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக இருக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசு வேலையில் பணிபுரிபவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகும். உங்கள் செயலில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சிலரின் திருமணம் தொடர்பாக நல்ல செய்திகள் தேடிவரும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்காது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சொந்தத் தொழில், வியாபாரம் தொடர்பாக எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். பருவ கால நோய் பாதிப்புகள் ஏற்படும். இன்று உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. நண்பர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல், அரசு வேலை தொடர்பான நபர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கக்கூடிய நாள். இன்று பணியிடத்தில் கௌரவம் கிடைக்கும். இன்று நெரிசலான இடத்திற்கு செல்வதை தவிர்க்கவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. திட்டமிட்ட செயல்கள் நிறைவேறும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பயணங்களின் போது உங்கள் ஆரோக்கியத்தில், உடைமைகள் மீதும் கூடுதல் கவனம் தேவை. அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த செய்திகள், வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சில் கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டிலும், பணியிடத்திலும் மரியாதை இருக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செயல்பட வாய்ப்பு கிடைக்கும். இன்று பிறருக்கு கடன் கொடுத்த தொகை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பாக கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் நீங்கள் திட்டமிட்ட வேலைகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள் அல்ல. குடும்பத்தில் ஒருவரின் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோருக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். தனிமையில் உள்ளவர்களுக்கு திருமணத்திற்கான நல்ல வாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சில முக்கியமான விஷயங்கள் விவாதிப்பீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மன அழுத்தத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்க முடியும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். இன்று சிலர் தலைவலி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளின் வேலையில் பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கும்.

Share
தொடர்புடையது
ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...