tamilnaadi 7 scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 27 பிப்ரவரி 2025 – Daily Horoscope

Share

இன்றைய ராசி பலன் : 27 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 27.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 15, வியாழக் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் புனர்பூசம், பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும். இன்று சில பணம் நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வு தொடர்பாக மன அழுத்தத்தில் இருப்பார்கள். இன்று உங்கள் வேலை தொடர்பான திட்டங்கள் சிறப்பான வகையில் நிறைவேறும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். இன்று உங்கள் பேச்சில் நிதானம் தேவை.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் திறமைகள் மூலம் எதிரிகளை சிறப்பாக வெல்ல முடியும். பணியிடத்தில் தொழிலதிபர்கள் அல்லது அதிகாரிகளுடன் இணக்கமான சூழலை கடைப்பிடிக்கவும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அரசு மற்றும் அரசியல் தொடர்பானவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று உங்களின் கவலை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. உறவில் விரிசல் ஏற்படும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலன் பெறுவீர்கள். இன்று உடல் நலனில் தொய்வு ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான, ஆதரவான சூழலில் ஏற்படும். இன்று வண்டி, வாகனம், வீடு வாங்குதல் போன்ற விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே செயல்படவும். இன்று உங்கள் குடும்ப சூழல் பதட்டமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் புதிய ஆற்றல் உருவாகும். புதிய விஷயங்களை செய்ய முயல்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயத்தில், ஆபத்தான விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும், தோழமையையும் பெறுவீர்கள். இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்கும் அதனால் கவலை ஏற்படும். திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை கவனித்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் வேலை, தொழில் தொடர்பான முயற்சிகளும் நல்ல பலனை தரும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மன குழப்பமான சூழல் உருவாகும். இன்று குடும்ப உறுப்பினர்களையும், பணியிடத்தில் சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பு தொடர்பாக ஆசிரியர்களின் சிறப்பான ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பாக சில பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இனிமையான பேச்சு, செயலில் கவனம் தேவைப்படும். இன்று புதிய நண்பர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளியூர், வெளிநாடு மூலம் வேலை, வியாபாரம் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் முடிக்க முடியும். முக்கியமான வேலைகளை முடிப்பது தொடர்பாக மன அழுத்தம் ஏற்படும். தொழில் தொடர்பான முதலீடுகள் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் பெற்று தரும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடு திட்டங்கள் விஷயங்களில் கவனம் தேவை.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர்களின் வேலை தொடர்பாக பெரிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். பணியிடத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். இன்று மாணவர்கள் சரியானது திட்டமிட்டு படிப்பது நல்லது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகளிடம் இருந்து சில தொந்தரவுகள் ஏற்படும். திடீர் பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக நன்மை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.

Share
தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...