இன்றைய ராசி பலன் : 25 பிப்ரவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 25.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிடம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் இலக்குகளை அடைய முடியும். உங்களின் நிதிநிலை சிறப்பாக இருக்கும். அன்றாட செலவுகளை சமாளிக்க முடியும். உங்கள் இயல்பில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சிக்கவும். தாய் வழி சொந்தங்கள் மூலம் நிதி நன்மைகள் பெறுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் உதவியால் பண நன்மைகளை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். உங்களின் எதிர்காலம் தொடர்பாக கவலை அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வருவாய் அதிகரிக்கும். புதிய ஆடைகள், அணிகலன்கள் வாங்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பு தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் செய்யக்கூடியவர்கள் திருமணத்திற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள். வேலை, படிப்பு தொடர்பாக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பழைய முதலீடுகள் மூலம் நன்மை பெறுவீர்கள். செல்வ நிலை அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஒவ்வொரு செயலிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய நாள். வேலைகளை முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பாக பிறரிடம் முடங்கி இருந்த பணம் திரும்ப கிடைக்கும். உங்களின் மன உறுதி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி பதில் வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக விரும்பிய லாபம் கிடைக்கும். உங்கள் செயலில் மகிழ்ச்சியும், பெருமையும் அதிகரிக்கும். எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவார்கள். உடன் பிறந்தவர்களுடன் உள்ள மனக்கசப்பு நீங்கும். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். சுற்றுலா தொடர்பாக நன்மை பெறுவீர்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வாய்ப்பு உண்டு.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்குச் செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அதிகரித்து வரும் செலவுகளால் கவலை அடைவீர்கள். மூதாதையர்களின் சொத்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் செயல் மகிழ்ச்சியையும், லாபத்தையும் பெற்றுத்தரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அரசு வேலை, அரசியல் தொடர்பான அவர்களுக்கு சாதகமான நாள். இன்று உங்களுக்கு சில சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். கடினமான நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் வெற்றிக்கு உதவும். நீண்ட காலமாக பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கல்வி, வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான நாள். சொத்து தொடர்பான தகராறுகள் தீரும். இன்று வேலை தொடர்பாக திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகள் தொந்தரவு தர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வேலைகளை முடிப்பதில் சரியாக திட்டமிட்டு செயல்படவும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலைகளை முடிப்பதில் மும்முரமாக செயல்படவும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்கள் வேலைகளை நீங்களே செய்து முடிக்கும் முயற்சி செய்யவும். குடும்பத் தொழிலில் பெற்றோர், சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் மன அமைதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் அல்லது உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று உங்கள் புகழ் பணியிடத்தில் அதிகரிக்கும். தாயின் உடல் நலம் தொடர்பாக கவனம் தேவை.