இன்றைய ராசிபலன் 04.02.2025, குரோதி வருடம் தை மாதம் 22, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள பூரம், உத்திரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட கால பணிகளை முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம் தொடர்பாக கவனம் தேவை. உங்கள் உடல் நலனில் கவனம் தேவை. இன்று சரியான ஆலோசனையின் பேரில் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் வருங்காலத்தில் லாபம் இரட்டிப்பாகும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் அடைவார்கள். இன்று உங்கள் வாழ்வாதார துறையில் இருக்கும் முயற்சிகளில் சிறப்பான வெற்றி உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென பெரிய பண வரவு எதிர்பார்க்கலாம். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியையும் பராமரிக்க முடியும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இன்று உங்களின் புகழ், நிதிநிலை முன்னேற்றம் அடையும். புத்திசாலித்தனத்துடன் இருக்க கூடிய முடிவுகள் மூலம் நிச்சயமான முக்கியமான வெற்றியைப் பெறுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் எந்த போட்டியிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவ முன் வருவீர்கள். உங்களின் சுயநலம் அதிகமாக இருக்கும். உங்களின் முக்கியமான வேலைகளை முடிப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த லாபம் பெறலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று திருமணம், சுப காரியங்கள் தொடர்பாக நல்ல விஷயங்கள் நடக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். சிறு தொழில் செய்யக்கூடிய அவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மீது அன்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிதமான பலன் கிடைக்கக்கூடிய நாள். உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். இன்று பணியிடத்திலும், குடும்ப மரியாதை அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கான எதிர்பார்த்த பலனை பெற்றிடுவீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நாள். ஏனெனில் நிதி நிலைமை கடுமையான சிக்கல் சந்திக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதரவை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப சூழல் அமைதியாக இருக்கும். சகோதரர்களுடன் உறவு மேம்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பங்கு சந்தை அல்லது லாட்டரி தொடர்பான முதலீடு விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். இன்று புதிய முதலீடு தொடர்பான விஷயத்தில் நிபுணர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. காதல் வாழ்க்கையில் தடைகள் விலகும். பிள்ளைகளிடமிருந்து நேர்மறையான செய்திகள் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் நிச்சய வெற்றி பெறலாம். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். வேலை, குடும்ப பொறுப்புகள் நிறைவேற்றி மகிழ்வீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். சமூக பணிகளில் எதிர்பார்த்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் புகழ் அதிகரிக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் எதிர் பாலினத்தவரின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தொடர்பாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடன் எளிதாக பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கவலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் பல பணிகளை செய்து முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த நிச்சய வெற்றியை பெறுவீர்கள். நண்பர்கள், அண்டை வீட்டாரை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று முதலீடு விஷயங்களில் நிதானமாகவும், நிபுணர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது.
- 2025 rasi palan
- 2025 rasi palan videos
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2025
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- rasi palan videos tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- vendhartv rasi palan
- vidyadharan rasi palan