இன்றைய ராசி பலன் 09.03.2024 – Today Rasi Palan
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்க அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள். வீட்டுச் செலவுகளும் அதிகரிக்கலாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
முகம் தெரியாத எவரிடமும் அதிகமாக பேச வேண்டாம். அது உங்களுக்கு தொல்லையாக இருக்கும். திருமண வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் மற்றும் காதலிப்பவர்கள் இன்று சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வருமானத்தை அதிகரிப்பது குறித்து சிந்திப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்குச் சிறிது பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இன்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. ஒரு சிறப்பு நபர் மீது உங்கள் ஈர்ப்பு அதிகரிக்கும். இன்று நீங்கள் புதிய முதலீடு செய்ய ஏற்ற நாள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், இல்லையெனில் சில உடல் உபாதைகள். இன்று நீங்கள் மன அழுத்தமாக உணர்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். ஆனால், வருமானம் குறைவாகவே இருக்கும். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைத் தரும். அதிர்ஷ்டத்தால் உங்களின் சில வேலைகள் கைகூடும்.
காதல் வாழ்க்கைக்கு சாதகமான நாள். எங்கிருந்தோ சில நல்ல செய்திகள் உங்கள் காதுகளுக்கு வெறும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும், வாழ்க்கைத்துணை மனம் விட்டுப் பேசுவார்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான தினமாக இருக்கும். உங்கள் செலவுகள் வழக்கத்தைவிட அதிகரிக்கலாம். இது உங்கள் கவலையை அதிகரிக்கும். இன்று நீங்கள் சில சவால்களை எதிர்கொள்வீர்கள். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் பணத்தை முதலீடு செய்யலாம். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இன்று மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கைக்கும் இந்த நாள் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்களின் வருமான அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமை உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தத்தைக் கொண்டு வரும்.
உங்கள் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில், உங்கள் மனைவியுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தனிப்பட்ட வேலைகளுடன் குடும்ப நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டியிருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். செலவுகள் குறைவாக இருக்கும், நல்ல வருமானம் இருக்கும். இதன் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் வெற்றி கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும்.
உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறைவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கோபத்தை உங்கள் இயல்பிலிருந்து விலக்கி வைக்கவும். தேவையில்லாமல் யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். வேலையில் மகிழ்ச்சியடைவீர்கள்.
வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும்.
காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். திருமணமானவர்கள் தங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை முன்வைக்க சிறந்த நாள். உங்கள் குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்ற இறக்கமான நாளாக இருக்கும். எனவே, கவனமாக இருங்கள். மன நிம்மதிக்கு இடையூறு ஏற்படும். இதனால், உங்கள் உடல்நிலை மோசமடையலாம். குடும்ப சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். வீட்டு வேலைகளில் உங்கள் மனைவி உங்களிடம் உதவி கேட்கலாம். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றிகரமாக இருக்கும். சில நல்ல செய்திகள் கேட்கலாம். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். அதேபோல உங்கள் விருப்பங்களும் நிறைவேறும். இன்று ஒரு சிறப்பு வாய்ந்த நபரை சந்திப்பீர்கள். இதனால், உங்களின் பழைய நினைவுகள் மகிழ்ச்சியை கொடுக்கும்.
இன்று வெற்றி உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்குள் ஒரு திருப்தி உணர்வு இருக்கும். காதல் வாழ்க்கை சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் உண்டாகலாம். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்..
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். உங்களுடன் பணிபுரிபவர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை சம்பந்தமான முடிவுகளும் சிறப்பாக இருக்கும்.
காதல் வாழ்க்கை இயல்பாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்வில் திருப்திகரமாக உணர்வார்கள். அதே சமயம் காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் துணைக்கு அருமையான பரிசைக் கொண்டு வருவார்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல தருணங்களை அனுபவிப்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றத்தை சந்திக்க நேரிடும்.வாழ்க்கைத் துணையுடன் ஏதோ ஒரு விஷயத்தில் விரிசல் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் வெற்றி நிறைந்ததாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று முழுமையாக ஆதரிக்கும். இன்று நீங்கள் நினைத்த அனைத்து விஷயங்களும் வெற்றியடையும். நண்பர்களின் உதவியால் புதிய வேலையைத் தொடங்கலாம். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் மந்தமாக காணப்படுவார்கள். உங்கள் குழந்தையுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஒருவரின் உடல்நிலை மோசமடைவதால் குடும்பச் சூழல் சற்றே குழப்பமாக இருக்கும்.
- 2023 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- daily rasi palan zee tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- indraya rasi palan zee tamil
- nalaiya rasi palan
- new year rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- zee tamil rasi palan today