இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 19, 2023, சோபகிருது வருடம் ஆவணி 2 சனிக் கிழமை. சந்திரன் கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கன்னியில் செவ்வாய், சந்திரன் மாற்றம் நடக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று ராசி அதிபதி செவ்வாய் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆறாம் இடத்தில் இருக்க கூடிய செவ்வாயால் தன லாபம் ஏற்படும்.
பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும்.
இன்று ஏழுமலையானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவான நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் தரக்கூடிய நாளாக இருக்கும்.இன்று தனலாபம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.
இன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்ய சிறப்பான பலன் கிடைக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்று மனதிற்கு மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் மற்றும் செவ்வாயின் செயற்கை நடைபெறுவதால் உங்களுக்கு வீடு மனை யோகம் உண்டாகும்.நிலம் சார்ந்த பிரச்சினைகள் தீரும்.
கடக ராசி பலன்
கடக ராசி நேயர்களுக்கு இன்று சந்திரன், செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால் மன கஷ்டங்கள் தீரும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள் தீரும். எட்டாம் இடத்தில் சனி வக்கிர நிலையில் இருப்பதால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும். புதுமனை தம்பதிகள் முருகப்பெருமானை வழிபடுவதால் மன ஒற்றுமை ஏற்படும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் உங்கள் பேச்சு செயலில் கூடுதல் கவனம் தேவை. பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இன்று எந்த விஷயத்திலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படும் பயணத்தின் போது உங்கள் உடைமைகளையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும்.
கன்னி ராசி பலன்
உங்கள் ராசி சந்திரனும் செவ்வாயும், 12-ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை நடப்பதால் உங்களுக்கு சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். இன்று தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நன்மையை தரும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று இருசக்கர வாகனங்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று நல்லது ஒரு லாபத்தை தரக்கூடிய நாளாக இருக்கும்.புதிய வியாபாரம் முயற்சிகளில் வெற்றி உண்டு. புதிய நண்பர்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்களும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும்.இன்று பண விவகாரங்களில் எச்சரிக்கை உடன் இருக்கவும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று ராசி அதிபதி செவ்வாய் சந்திரனுடன் லாப ஸ்தானத்தில் சேர்ந்து இருப்பதால் நல்ல தன லாபத்தை பெறலாம். இன்று விரயங்களும் காத்திருக்கிறது. கேட்டை மற்றும் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்கள் மூலம் நன்மைகள் நடக்கும்.
கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் நல்ல லாபம் ஏற்படும்.இன்று தெளிவான சிந்தனை உடன் முடிவெடுப்பீர்கள். இன்று விநாயகர் ஆலயங்களில் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் நல்லதொரு மாற்றத்தை தரக்கூடிய நாளாக இருக்கும் பத்தாம் இடத்தில் இருக்க கூடிய சந்திரன் மற்றும் செவ்வாய் உங்களுக்கு நல்ல ஆறுதலையும் மாற்றத்தையும் தரக்கூடியவர்களாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். இன்று புத்துணர்வு தரக்கூடிய நாளாக அமையும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு நிறைவான நாளாக அமையும்.
மகர ராசி பலன்
மகர ராசி நேயர்களுக்கு இன்று காலா உங்கள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். பங்கு சந்தை முதலீடுகள் இன்று லாபம் இரட்டிப்பாக்கலாம். இன்று மனச்சோர்வு, மனக்குழப்பங்கள் இல்லாத நாளாக இருக்கும். இன்று சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வியாபாரம் சார்ந்த திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். இன்று விநாயகர் வழிபாடு செய்யவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று சதயம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. கும்ப ராசி நேரு நாள் முழுவதும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு இன்று சில ஏமாற்றங்கள் ஏற்படும்.
அதனால் புதிய நண்பர்களிடமும் வெளியிடங்களிலும் கவனமாக இருக்கவும். பயணங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்று பைரவர் வழிபாடு செய்வது நல்லது.
மீன ராசி பலன்
மீன ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தைத் தரக்கூடிய நாளாக இருக்கும். நம்மிடத்தில் இருக்கக்கூடிய குரு மற்றும் ராகு அமைப்பால் குடும்பத்தில் சலசலப்பு நிலவும். கணவன் மனைவி இடையே மனக்கசப்பு குழப்பங்கள் ஏற்படும். இன்று தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதும் விட்டுக்கொடுத்துச் செல்வதும் நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளிலும், விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumbam rasi palan 2024 in tamil
- magaram rasi palan 2024 in tamil
- meenam rasi palan 2024 in tamil
- nalaiya rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
- viruchigam rasi palan 2024 in tamil
- zee tamil rasi palan today
Leave a comment