Medam
புது முயற்சிகள் தாமதமாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். வெளியிடத்தில் செல்வாக்கு உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் வெற்றிபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் உண்டு. தொழில் முயற்சிகளை தள்ளி வைக்காதீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.
Edapam
நீண்டநாளாக காணப்பட்ட பிரச்சினை தீரும். வீண்வம்பில் சிக்குவதற்கு வாய்ப்புண்டு. பெற்றோரின் தேவை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாரா பணவரவு உண்டாகும். சிறந்த சிந்தனை உண்டாகும். எதிர்கால வளர்ச்சி பற்றி திட்டம் தீட்டுவீர்கள். உடல் நலனின் அக்கறை மேம்படும். புது முயற்சிகளை தள்ளிப் போடாதீர்கள். மனம் பரபரப்பாக காணப்படும். நினைத்த காரியம் வெற்றிபெறும். லாபம் உண்டாகி மகிழ்ச்சி தரும்.
Mithinam
முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். பணியிடத்தில் உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பாரா கடன் மீளக் கிடைக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். வீண் பேச்சுக்களைத் தவிருங்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும்.
Kadakam
ராகு கேதுவால் நன்மை உண்டாகும். பணியாளர்கள் வீண்பேச்சை தவிர்க்கவும். பணியிடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுபநிகழ்வுகள் ஏற்பாடாக வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். மனதுக்கு அமைதி கிடைக்கும்.
Simmam
சாதகமானவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து சிக்கனம் பேணுவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். பேச்சுக்களில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். தெய்வ வழிபாடு சங்கடங்களைத் தீர்க்கும். பணியில் கூடுதல் கவனம் அவசியம்.
Kanni
புது முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணிச்சுமை குறையும். பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். உறவினர்களால் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. எதிர்பாரா நல்ல செய்தி உண்டாகும். திட்டமிட்டு பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். வெற்றி உண்டாகும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
Thulaam
அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிர்வகிக்கும் திறன் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடையே மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் நல்லபடியாக நிறைவேறும். குடும்ப உறுப்பி னர்களின் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியம். கணவன் – மனைவி இடையே அன்னியோன்யம் பெருகும். வழிபாடு மேம்படும்.
Viruchchikam
தேவையற்ற பிரச்சினைகள் நீங்கும். பெண்களின் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்பால் வளர்ச்சி உண்டாகும். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். சகபணி யாளர்களால் மறைமுக போட்டி ஏற்பட வாய்ப்புண்டு. பிரச்சினை நீங்கும்.
Thanusu
புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். ஆண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரம் சுமாராகவே காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தெய்வீக பக்தி உண்டாகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். சுப செய்தி கிடைக்கும்.
Maharam
மறைமுக பிரச்சினைகளால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். உறுதியான தன்னம்பிக்கை நல்ல முடிவுகளை கிடைக்கச் செய்யும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். பணியிடத்தில் மதிப்பு கூடும். உறவினர்களின் ஆலோசனையைப் பின்பற்றி நடந்தால் வெற்றி உண்டாகும். மனதில் உறுதி உண்டாகும். சமாளிக்கும் திறன் பெறுவீர்கள்.
Kumbam
பணவரவு கணிசமாக இருக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தெய்வபக்தி அதிகரிக்கும் எடுத்த செயலை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் உண்டாகும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்று. நண்பர்களால் மனச்சஞ்சலம் உண்டாகும் வாய்ப்பு உண்டு. பொறுமையைக் கடைப்பிடித்தல் நன்று. ஆன்மிக எண்ணம் உருவாகும்.
Meenam
விநாயகர் வழிபாடு துன்பம் நீக்கும். முன்னேற்றகரமான சூழ்நிலை உண்டாகும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். நண்பர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தினரின் அன்பு கிடைக்கும். மற்றவர்களால் முடியாததை நீங்கள் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடையே நற்பெயர் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். போட்டிகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.
Leave a comment