இன்றைய ராசி பலன் 25.11.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் 25 நவம்பர் 2023 : மேஷ ராசியில் சந்திரன் பயணிக்க செய்ய உள்ளார். சிம்மம், கன்னி ராசியில் உள்ள உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்றைய நாள் பலனை ஜோதிடர் நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்தியான நாளாக இருக்கும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.இருப்பினும் இன்றைய வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சந்திர பகவானின் சஞ்சாரம் என்று உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். முக்கிய முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். இன்று நண்பர்களின் உதவி ஆறுதலை தரும். இன்று உங்களுக்கு சுக செலவுகள் ஏற்படும். புகழ் உண்டாகும். சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு திருப்தியான நாளாக அமைகிறது. எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். குதூகலமான நாளாக அமையும். மனக்குழப்பங்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும்.இனிய காலை வேளையில் சந்தித்து செயல்படுவது நல்லது. இன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பயணம் செல்வது குறித்து திட்டமிடுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் உங்களுக்கு குழப்பமான நாளாக இருக்கும். பகல் நேரத்துக்கு பிறகு குழப்பங்கள் தீரும். மனதளவில் இருக்கக்கூடிய குழப்பங்கள், பய உணர்வு உங்கள் வேலையில் என்ன கவன குறைவை உருவாக்க நேரிடும். பகல் நேரத்திற்கு பிறகு சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளிலும், பணம் தொடர்பான விஷயங்களிலும் கவனமாக செயல்படவும். உங்களின் துணையின் ஆலோசனையும், ஆதரவும் கிடைக்கும். இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மன கிளேசத்தை உருவாக்கும். இன்று கொடுக்கல் வாங்கலில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்த காரியத்தில்.வெற்றிகள் கிடைக்கும்.இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். சில உடல் நல குறைபாடுகளும், மன சஞ்சலங்களும் வந்து செல்லக் கூடியதாக இருக்கும். என்று எந்த ஒரு வேலையை செய்தாலும் கவனத்துடன் செய்து முடிக்கவும். குலதெய்வ பிரார்த்தனை செய்வது நல்லது. அலுவலக வேலையில் உங்களின் திட்டமிடல் நிறைவேறும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாலு முழுவதும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசிநாதன் சூரியன், செவ்வாய் மற்றும் புதனுடன் சேர்ந்து இருப்பதால், உங்களின் வேலைகளை செய்து முடிப்பதில் ஆரோக்கியம் ஒத்துழைக்காத நிலை இருக்கும்.
இருப்பினும் நீண்ட நாட்களாக இருந்த போதும் தூக்கம் இன்மை மற்றும் பய உணர்வுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். இன்று நாள் முழுவதும் அலைச்சல் இருக்கும், மும்முரமாகவும் செயல்படுவீர்கள்.இன்றைய நாளில் தெளிவான மனநிலை கிடைக்க விநாயகர் வழிபாடு செய்யவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைகிறது. கணவன் மனைவிய ஒற்றுமை மேம்படும்.சிலருக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட வேலைகளில் தாமதம் ஏற்படும். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திலும், பணியிடத்திலும் எந்த ஒரு வாதத்தில் இருந்து விலகி இருக்கவும். எந்த ஒரு வேலையை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செயல்படும். இன்று உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய உடல், மன ஆரோக்கியம் மேம்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மனக்குழப்பங்கள் தீரும். மன அழுத்தம் இல்லாத நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று மாலை நேரத்தில் உங்கள் அனைத்து வேலையிலும் நிறைவேறி மகிழ்ச்சியான நாளாக அமையும்.. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு செய்ய எடுத்துக் காரியத்தில் வெற்றி கைகூடும். வீடு மனை வாங்குதல், சொத்து தகராறு போன்ற விஷயங்களில் பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட தூர பிரயாணம் உங்களுக்கு நன்மையை தரும்.இன்றைய நாளில் உங்களுக்கு ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கும். உங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் லாப வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்கலாம். திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமைகிறது. புதிய வேலை முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். மனபாரங்கள் தீரக்கூடியதாக இருக்கும். கடன் பிரச்சினைகளில் நண்பர்களின் உதவி உங்களுக்கு மன ஆறுதலை தரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். எந்த ஒரு பண பரிவர்த்தனை செய்வதிலும் கவனமாக இது செயல்படவும். உடல் நிலையில் அக்கறை செலுத்தவும்
இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு செய்வது நல்லது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்தியான நாளாக இருக்கும். அடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளிலும், திட்டங்களிலும் வெற்றி கிடைக்கும். கடன் தொல்லைகள் இல்லாத நாளாக அமையும். திருமணம் முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். கடைப்பட்ட வேலைகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று காலை வேளையில் உங்களுக்கு காரியா தடைகள் ஏற்படும். பிற்பகலில் உங்களுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சந்திரனின் சஞ்சாரம் உங்களுக்கு குடும்பத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். குடும்பம் சார்ந்த எந்த ஒரு முடிவை எடுத்தாலும் யோசித்து செயல்படவும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்பாட்டால் மரியாதை அதிகரிக்கும். துணையிடமிருந்த கருத்து வேறுபாடு விலகும். பயணங்கள் செய்ய திட்டமிடுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அமோகமான நாளாக இருக்கும். மணபாரங்கள் இல்லாத நாளாக அமைகிறது. கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இன்று ஏற்ற இறக்கங்கள் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை சில சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.நண்பர்களின் வருகை ஆறுதலை தரும். வியாபாரத்தில் நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியது இருக்கும். இருப்பிடம் பிரச்சினைகள் தீர்ந்து நன்மை அடைவார்கள்.
- 2023 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2023
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- new year rasi palan 2024
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan today
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- vaara rasi palan
- zee tamil rasi palan today