ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 27 ஜனவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 27.01.2025 குரோதி வருடம் தை மாதம் 14, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள சேர்ந்த கார்த்திகை, ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் ரீதியாக இனிமையான பலன் தரக்கூடிய கூடிய நாள். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் இனிமையான பேச்சால் பிறரின் மனதை வெல்வீர்கள். வாழ்க்கைத் துணையுடம் இருக்க கூடிய கருத்து வேறுபாடுகள் தீரும். நீண்ட நாட்களாக காத்திருந்த சில நல்ல தகவல் தேடி வரும். இன்று வீட்டில் விருந்து விழாக்களுக்கு ஏற்பாடு செய்வீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு நல்ல நாளாக அமையும். இன்று வீட்டு விசேஷம், ஆன்மீக வழிபாடு தொடர்பாக மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். இன்று மன அமைதியை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். இன்று யாரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். புதிய சொத்து வாங்குதல் தொடர்பாக அதிக செலவு ஏற்படும். தேவையற்ற பயணங்களை ரத்து செய்யவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிதமான பலன் தரக்கூடிய நாள். சமூகத்தில் உங்கள் மீது எதிர்மறையான பிம்பம் ஏற்படும். இன்று நேர்முறையான எண்ணத்துடன் செயல்படவும். இன்று பிறருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால் அதை செய்யவும். இன்று ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப மூத்தவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்த கால முதலீடுகள் மூலம் நன்மை பெறுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இன்று உங்கள் குடும்ப பரப்புகளை முடிப்பதில் கவனம் தேவை. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உங்களுக்கு சில பாதகமான செய்திகள் கிடைக்கும். திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று பெரிய பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படவும். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கக் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கல்வித்துறையில் விரும்பிய வெற்றியை பெற வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு சிறந்த நாளாக அமையும். காதல் வாழ்க்கையில் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று சமூகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தந்தையின் ஆலோசனை உங்களுக்கு உதவும். இன்று தொழில் தொடர்பாக கவலையும், மன அழுத்தமும் ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எதையாவது நினைத்து தேவையில்லாத கவலை ஏற்படும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். யோகா, தியானம் செய்து உங்களை நிதானப்படுத்திக் கொள்வது நல்லது. பயணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. வண்டி, வாகன பயன்பாட்டில் நிதானமாக கைகளாகவும். இன்று கடன் கொடுப்பதைத் தெரிவிக்கவும். வீடு, நிலம் வாங்கும் கனவு நிறைவேறும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியம், வீரம் அதிகரிக்கும். எதிரிகளை எளிதாக வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் ஆசை நிறைவேறும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிரச்சனை நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் தான் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். திருமண முயற்சியில் உள்ளவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். உங்கள் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவது துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்ட விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான பலன் தரக்கூடிய நாள். மனதில் நிலையற்ற தன்மை இருக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். தாய் வழி சொந்தங்கள் மூலம் நிதி நன்மைகள் பெறுவீர்கள். உங்களின் உடல்நல பிரச்சனைகள் தீரும். இன்று பிள்ளைகளின் செயல்பாடு நிகழ்ச்சியை அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான ப்லன் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பணியிடத்தில் கவனக்குறைவைத் தவிர்க்கவும். நீண்ட காலமாக எதிர்பார்த்த வேலைகள் முடித்து மகிழ்வீர்கள். முக்கிய விஷயங்களில் உடன்பிறந்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். உடல் நலனில் தேவையற்ற கவலை ஏற்படும். புதிதாக திருமணமானவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று லாபம் அதிகரிக்க கூடிய நாள். இன்று தொழில் தொடர்பாக சகோதரர்களிடமிருந்து நல்ல ஆலோசனை கிடைக்கும். உங்கள் பேச்சு, செயலில் நிதானம் தேவை.